ஐபிஎல் 2025 முதல் போட்டி தடை.. 30 லட்சம் அபராதம்.. ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ தண்டனை

0
312

நடப்பு ஐபிஎல் சீசனை பொருத்தவரை மும்பை இந்தியன்ஸ் அணி பத்து தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் சீசனை முடிக்கிறது. மேலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு 30 லட்சம் மற்ற பத்து வீரர்களுக்கும் 12 லட்சம் அல்லது போட்டி கட்டணத்திலிருந்து 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு நிச்சயமாக மும்பை அணி செல்லும் என்று சீசன் தொடக்கத்தில் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்திருந்தனர். ஏனெனில் கடந்த சீசனில் காயம் காரணமாக விளையாடாத பும்ரா இந்த சீசனுக்கு திரும்பினார். மேலும் குஜராத் அணியில் கேப்டன் பொறுப்பை ஏற்று வழி நடத்திய ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு திரும்பினார்.

- Advertisement -

இதன் காரணமாக மும்பை அணி நிச்சயமாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று அனைவரும் கூறினர். ஆனால் இந்த சீசனில் நடந்ததோ முற்றிலும் வேறு. 10 போட்டிகள் தோல்வி அடைந்து நான்கு போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் தொடரை முடிக்கிறது.

நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 214 ரன்கள் குவிக்க, பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி 196 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. மும்பை அணியில் ரோகித் சிறப்பாக விளையாடினாலும் மற்ற வீரர்கள் அனைவரும் சொதப்பியதால் மும்பை அணியால் இந்த இலக்கை மட்டுமே எட்ட முடிந்தது.

- Advertisement -

அணியின் கேப்டன் ஹர்த்திக் 13 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே குவித்து ஆட்டம் இழந்து வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் மூன்றாவது முறையாக குறிப்பிட்ட நேரத்தை தாண்டி தாமதமாக பந்து வீசியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த சீசன் முதல் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் மும்பையின் கேப்டனாக இருப்பதால் அவருக்கு 30 லட்சம் ரூபாய் அபராதமும், மேலும் அணியின் மற்ற வீரர்களுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதமும் அல்லது போட்டி கட்டணத்திலிருந்து 50 சதவீதம் தொகையை செலுத்த வேண்டும் என்று பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. இது ஏற்கனவே டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டுகு இந்த சீசனில் ஒரு முறை நடந்துள்ளது. மூன்று போட்டியில் தொடர்ச்சியாக தாமதமாக பந்து வீசிய காரணத்தால் அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:எங்க தப்பு நடந்துச்சுன்னு பாக்குறதுக்குள்ள.. முழு ஐபிஎல் முடிஞ்சிடுச்சு.. மோசமான சீசன் – ஹர்திக் பாண்டியா பேட்டி

டெல்லி அணியின் முக்கியமான போட்டியில் அவர் வெளியேறியதால் அக்சர் பட்டேல் கேப்டன் பொறுப்பை ஏற்றார். ஆனால் அந்த போட்டியில் டெல்லி அணி தோல்வி அடைந்து பிளே ஆப் சுற்றை விட்டு பரிதாபமாக வெளியேற வேண்டிய நிலைக்கு ஆளானது. எனவே இந்த தண்டனையில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் டெல்லி கேப்டன் கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -