தோனி ரசிகர்களுக்காகத்தானே விளையாடறிங்க.. அப்ப இத செய்யுங்க – இர்பான் பதான் வேண்டுகோள்

0
37
Dhoni

இன்று ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த போட்டியில் தோனிக்கு இர்பான் பதான் ஒரு முக்கிய வேண்டுகோள் ஒன்றை வைத்திருக்கிறார்.

இன்று இரு அணிகளும் ஓதிக் கொள்ளும் போட்டியில் சென்னை அணி வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசம் அல்லது 11 பந்துகள் மீதும் வைத்து வெல்ல வேண்டும். இப்படி வென்றால் அந்த அணி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும்.

- Advertisement -

இந்தப் போட்டி தோனிக்கு கடைசி போட்டியாக இருந்தால் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் கிடையாது. மேலும் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையும் பலமானதாக இல்லை. இதையெல்லாம் கருத்தில் வைத்து இர்பான் பதான் முக்கிய வேண்டுகோள் ஒன்றை ரசிகர்களுக்காகவும் தோனியிடம் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து இர்பான் பதான் கூறும்பொழுது “தோனியால் ரன்களுக்கு ஓட முடிவதில்லை என்று கிடையாது. இரண்டு ரன்கள் அடிக்கும் பொழுது அவர் எப்பொழுதும் போல முனைப்புடன் அதற்கு ஓடுகிறார். நீங்கள் ரசிகர்களுக்காக விளையாடுகிறேன் என்று சொன்னீர்கள். அப்படி இருக்கும் பொழுது ரசிகர்கள் உங்களை பேட்டிங்கில் நீண்ட நேரம் பார்ப்பதற்கு விரும்புவார்கள். எனவே பேட்டிங் வரிசையில் மேலே வர வேண்டும். ஆனால் தோனி தன்னுடைய 30 மற்றும் 32 வயதில் இருந்தது போல் சிறந்த பேட்டிங் பார்மில் கிடையாது என்பதும் உண்மை.

இங்கு அவருக்கு முழங்கால் பிரச்சனை இருக்கிறது. அவர் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் பெரிய இன்னிங்ஸ் எதுவும் விளையாடவில்லை. அதே சமயத்தில் அவர் 12, 13 வது ஓவர்களில் பேட்டிங் செய்ய வரலாம். அவர் தற்போது இருக்கும் பேட்டிங் ஃபார்மில் மேலே வந்து பேட்டிங் செய்ய வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல் 2025 முதல் போட்டி தடை.. 30 லட்சம் அபராதம்.. ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ தண்டனை

தோனி சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ கேப்டனாக இல்லாவிட்டாலும் கூட, அந்த அணியின் தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். எனவே எல்லா சூழ்நிலையும் கருத்தில் எடுத்துக் கொண்டு, பொறுப்பையும் எடுத்துக் கொண்டு அவர் பேட்டிங் வரிசையில் மேலே வர வேண்டும். அவரிடம் தற்போது சிறப்பாக இருக்கும் ஹிட்டிங் ஃபார்முக்கு பெங்களூர் சின்னசாமி மைதானத்தை விட ஏற்றது எதுவும் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.