உலக கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் தொடர்.. இங்கிலாந்து அணி அறிவிப்பு.. திடீரென மாற்றப்பட்ட கேப்டன்.. சாம்பியன்ஸ் டிராபிக்கு குறி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

கடந்த மாதங்களில் இங்கிலாந்து வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் இலங்கையில் வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாடி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்து வெள்ளைப்பந்து தொடர்கள்

இந்த நிலையில் இந்த மாதம் இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் என இரண்டு வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாட இருக்கிறது.

இதில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நவம்பர் 6ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து நவம்பர் 10ஆம் தேதி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் துவங்க இருக்கிறது.

- Advertisement -

ஜோஸ் பட்லர் விலகல்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஒரு நாள் தொடருக்கு தற்பொழுது இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தொடரில் காயம் காரணமாக இங்கிலாந்து கேப்டன் ஜோஸ்பட்டில் விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக லியாம் லிவிங்ஸ்டன் முதல் முறையாக இங்கிலாந்து அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்க இருக்கிறார்.

மேலும் இந்த அணியில் நட்சத்திர வீரர்கள் ஜோ ரூட், பென் டக்கெட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த வருடம் பாகிஸ்தானில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெற இருக்கும் சாம்பியன் டிராபி தொடருக்கு இளம் வீரர்களை பரிசோதிப்பதற்காக இங்கிலாந்து இந்த தொடரை பயன்படுத்திக் கொள்ள இருப்பது தெரிகிறது.

இதையும் படிங்க : ஒரே நாளில் 16 விக்கெட்.. 106 ரன்னில் சுருண்ட பங்களாதேஷ்.. தென் ஆப்பிரிக்கா முன்னிலை.. முதல் டெஸ்ட்

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி :

ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தேல், ஜாபர் சோஹன், சாம் குர்ரன், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன் (கே), சாகிப் மஹ்மூத், டான் மௌஸ்லி, ஜேமி ஓவர்டன், அடில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டாப்லி மற்றும் ஜான் டர்னர்.

- Advertisement -
Published by