தற்போது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 106 ரன்கள் எடுத்து சுருண்டு இருக்கிறது.
தென் ஆப்பிரிக்கா அணி இரண்டு போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று முதல் துவங்கி நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
டாஸ் வென்று சிக்கிய பங்களாதேஷ் அணி
இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. அந்த அணி சொந்த நாட்டு சூழ்நிலை சாதகத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்தது. ஆனால் தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சில் மிரட்ட பங்களாதேஷ் அணிக்கு சொந்த நாட்டில் சோகமே காத்திருந்தது.
பங்களாதேஷ் அணிக்கு முதல் இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர் ஹசன் ஜாய் தாக்குப்பிடித்து விளையாடி 30 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் பெரிய பங்களிப்பு செய்யவில்லை. முடிவில் பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 106 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் வியான் முல்டர், ரபாடா மற்றும் கேசவ் மகாராஜ் மூவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
தென் ஆப்பிரிக்க அணிக்கும் சரிவு
இதைத் தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் டோனி டி ஜோர்ஸி 30, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 23, ரிக்கல்ட்டன் 27 ரன்கள் எடுத்தார்கள். இன்று முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 41 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 142 இல் எடுத்திருக்கிறது.
இதையும் படிங்க : உங்க யோ-யோ டெஸ்டை தூக்கி போடுங்க.. சர்பராஸ் ரிஷப் பண்ட்தான் அதுக்கு முக்கிய சாட்சி – சுனில் கவாஸ்கர் விமர்சனம்
பங்களாதேஷ் அணியை தென் ஆப்பிரிக்கா அணி 106 ரன்னில் சுருட்டி இருந்தால் கூட, இந்த போட்டியில் வலிமையான முன்னிலையில் இருக்கிறது என்று கூற முடியாது. அதே சமயத்தில் பங்களாதேஷ் அணிக்கு இந்தியாவில் ஏற்பட்ட தோல்விக்கு அடுத்து சொந்த நாட்டிலும் பெரிய அடி கிடைத்திருப்பது, அந்த நாட்டு ரசிகர்களை வருத்தத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.






