தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடர், எல்லா போட்டிகளும் நிறைவடைந்து இறுதிப் போட்டியை எட்டி இருக்கிறது.
இந்திய அணி முதல் அரை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை பரபரப்பான ஆட்டத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முதல் அணியாகத் தகுதி பெற்றது. இந்திய அணி தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் போட்டியை விட பரபரப்பான போட்டியில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது.
நேற்று நடைபெற்ற இந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் 16 ரன்கள் 24 பந்துகளுக்கு தேவைப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியா கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே வைத்திருந்தது.
இந்த சூழ்நிலையில் கடைசி ஜோடி ஐந்து பந்துகள் மீதம் வைத்து 16 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணியை வெல்ல வைத்து இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றது.
மேலும் கடந்த வருட இறுதியில் இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணி வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்திருந்தது. இதற்கு ஆஸ்திரேலிய அண்டர் 19 அணியை இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வென்று பழி தீர்க்குமா? என்று இந்திய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
தற்பொழுது இந்த போட்டி குறித்து பேசி உள்ள ஆஸ்திரேலியா கேப்டன் கூறும் பொழுது “இந்தியா ஒரு கிளாஸ் டீம். அவர்கள் நிச்சயமாக வெளியே வந்து கடினமாகப் போராடுவார்கள். அந்தச் சவாலையும் அந்தச் சண்டையையும் நாங்கள் விரும்புகிறோம். உண்மையாகவே அதற்கு காத்திருக்கிறோம்.
இதையும் படிங்க : “மகன் மருமகளுடன் தொடர்பு கிடையாது.. ஜடேஜாவை கிரிக்கெட் வீரர் ஆக்கி இருக்கவே கூடாது” – தந்தை பேட்டி
நேற்றைய போட்டியில் எங்களுடைய கடைசி ஜோடியின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனாலும் அணியில் கொஞ்சம் உணர்ச்சிவசமான சூழ்நிலை காணப்பட்டது. நான் கொஞ்சம் பதட்டமாகவும் அதே வேளையில் உற்சாகமாகவும் அந்தச் சூழ்நிலையில் இருந்தேன். உண்மையில் என்ன நடந்தது என்று இதுவரை தெரியவில்லை. ஆனால் அது அருமையாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.