கேஎல் ராகுல் கேப்டன்சி மோசம்.. அவர் சொன்னபடி எதையும் செய்யல.. நீங்களே பாருங்க – முகமது கைஃப் விமர்சனம்

0
10
Kaif

நேற்று டெல்லி மைதானத்தில் டெல்லி அணிக்கு எதிராக லக்னோ அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்வியால் பிளே ஆப் வாய்ப்பையும் இழந்தது. லக்னோ அணியின் இந்த நிலைமைக்கு கேப்டன் கே எல் ராகுல் தான் காரணம் என முகமது கைப் விமர்சனம் செய்திருக்கிறார்.

டெல்லி மைதானத்தை பொறுத்தவரையில் முதல் பேட்டிங் செய்த அணிகள் வெற்றி பெற்று இருந்த நிலையில், கேஎல் ராகுல் வித்தியாசமாக முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்து தோல்வியடைந்திருக்கிறார். மேலும் விளையாட்டையும் பாசிட்டிவாக அணுகவில்லை. நேற்றைய போட்டியில் வென்று இருந்தால் பிளே ஆப் சுற்றுக்கு மிகப் பிரகாசமான வாய்ப்புகள் இருந்தது.

- Advertisement -

இது குறித்து முகமது கைப் கூறும் பொழுது ” வீடியோ அனலைஸ்டின் கம்ப்யூட்டரை எடுத்து ஓரமாக வையுங்கள். இந்த மைதானத்திற்கு எந்த நம்பர்களும் தேவையே கிடையாது. ஏனென்றால் இங்கு முதலில் பேட்டிங் செய்த அணிதான் வெற்றி பெற்று இருக்கிறது. மேலும் இங்கு 200 ரன்களை எந்த அணியும் துரத்தவே கிடையாது. நீங்கள் எதற்காக டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்ய வேண்டும்?

அர்ஷத் கானின் ஆட்டத்தை ஒதுக்கி வைத்தால், இது லக்னோ அணிக்கு மிக மோசமான தோல்வி. அவர்தான் உங்களின் பெருமையை கொஞ்சம் காப்பாற்றினார். இங்கு பேட்டிங் செய்யாதது ஒரு பயங்கரமான முடிவு என்று நான் நினைக்கிறேன். கேப்டனாக ராகுல் நிறைய ஏமாற்றம் தந்தார். இனி பாசிட்டிவாக விளையாடுவோம் என்று சொன்னார், ஆனால் அதற்கு பாசிட்டிவ்வான முடிவுகளை எடுக்கவில்லை.

நீங்கள் ஆடுகளத்தை பார்க்கும் பொழுது ஈரப்பதம் இருந்ததாக சொன்னீர்கள். ஆனால் உண்மையில் ஆடுகளத்தில் ஈரப்பதம் இல்லை. மேலும் நீங்கள் ஜாக் பிரேசரை முதல் ஓவரில் ஆட்டம் இழக்க செய்த பின்னும் அவர்களுக்கு 200 ரன்கள் விட்டுத் தந்தீர்கள். பந்துவீச்சிலும் நிறைய கேள்விக்குறிகள் இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : அடுத்த ஏபி டிவில்லியர்ஸ் கிடைச்சாச்சு.. இந்த பையன் எல்லா பந்தையும் அடிக்கிறார் – அம்பதி ராயுடு பேச்சு

டெல்லிக்கு இந்த வெற்றியால் எதுவும் கிடைக்காது. அவர்களுக்கு இரண்டு புள்ளிகள் மட்டும்தான் கிடைக்கும். ஆனால் நீங்கள் வெற்றி பெற்று இருந்தால் 16 புள்ளிகள் பெற்று ப்ளே ஆப் சுற்றில் நுழைவதற்கான ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் வீணாக்கி லக்னோ அணிக்கு இது மிக மோசமான தோல்வி என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.