ரியான் பராக் இல்லை.. இந்த 32 வயது உள்நாட்டு வீரரை.. இந்திய அணிக்கு விளையாட வைங்க – ஹர்பஜன் சிங் கோரிக்கை

0
1976
Harbhajan

நடப்பு ஐபிஎல் தொடரில் பல இந்திய உள்நாட்டு வீரர்கள் கவனம் ஈர்த்து வருகிறார்கள். இதன் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்து, புதிய இந்திய டி20 அணி உருவாக்கத்தில், தற்போது ஜொலித்து வரும் இந்திய உள்நாட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என நிறைய கோரிக்கை வந்து கொண்டிருக்கிறது. இந்த வகையில் ஹர்பஜன் சிங் ஒரு வீரரின் பெயரை முன் வைத்திருக்கிறார்.

தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அசாம் மாநில அணிக்காக விளையாடும் 22 வயதான இளம் பேட்ஸ்மேன் ரியான் பராக் 400க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார். மிடில் ஆர்டரில் வந்து இவ்வளவு ரன்கள் குவித்ததோடு, அவர் ரன்கள் அடிக்கும் தரமும் சிறப்பாக இருக்கிறது. மேலும் அவர் பகுதி நேர ஆப்ஸ் பின்னர் மற்றும் மிகச் சிறப்பான ஃபீல்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதேவேளையில் பஞ்சாப் மாநில அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காகவும் துவக்க ஆட்டக்காரராக விளையாடும் அபிஷேக் சர்மாவும் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் கவர்ந்திருக்கிறார். இடதுகை பேட்ஸ்மேனான இவர், பகுதி நேர இடதுகை சுழல் பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த யுவராஜ் சிங் இடத்தில் வைத்து பார்க்கப்படுகிறார்.

எனவே இந்த இரண்டு வீரர்கள் இந்திய அணிகள் இடம் பெறுவது குறித்து நிறைய முன்னாள் வீரர்கள் பேசி வருகிறார்கள். ஆனால் இவர்களில் இருந்து மாறுபட்டு இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் 32 வயதான பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் ஷஷாங்க் சிங் இந்திய அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “நான் ஒரு பெயரை தேர்வு செய்ய விரும்புகிறேன் அது ஷஷாங்க் சிங். இப்பொழுது அவருடைய வயது 32 இல்லை 33 இருக்கலாம். ஆனால் நீங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடும் பொழுது உங்களுடைய வயது என்ன என்பது முக்கியம் கிடையாது. உண்மையில் நான் இந்த வயதில் விளையாடும் பொழுதுதான் இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வென்றேன். 33 வயதில் ஒரு வீரர் பிட்டாக இருக்கிறார் என்றால் அவர் தாராளமாக விளையாடலாம். மேலும் அதே அளவுக்கு அவர் தொடர்ந்தால் 42, 45 வயது வரை விளையாடலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : கேஎல் ராகுல் கேப்டன்சி மோசம்.. அவர் சொன்னபடி எதையும் செய்யல.. நீங்களே பாருங்க – முகமது கைஃப் விமர்சனம்

தோனியைப் பாருங்கள் அவருக்கு வயது 42. இன்னும் ஐபிஎல் தொடரில் அவரது அணிக்காக அவர் விளையாடி வருகிறார். நீங்கள் உங்களுடைய உடல் தகுதியில் கவனம் செலுத்த வேண்டும். ஷஷாங்க் சிங் அவருடைய பேட்டிங் செய்யும் விதத்தில் தயாராகத் தெரிகிறார். அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்தியாவுக்காக விளையாட முடியும். டி20 உலகக் கோப்பைக்கு பிறகு அவரை இந்திய தேர்வாளர்கள் பார்த்தால் நல்லது எனக் கூறியிருக்கிறார்.