டி20 உ.கோ.. சாம்சன் ரிஷப் பண்ட் யார் ஆடனும்? 2 பேரும் ஆடலாமா – கம்பீர் நச் பதில்

0
582
Sanju

அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு சில வாரங்களுக்கு முன்பு இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் இடம் பெற்றிருக்கும் இரண்டு விக்கெட் கீப்பர்களில் யாரை விளையாட வேண்டும் என கவுதம் கம்பீர் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

தற்போது டி20 உலகக்கோப்பைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களாக இடதுகை பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், வலதுகை பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சங் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். மேலும் இந்த இருவருமே நடப்பு ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக இருந்து வருகிறார்கள்.

- Advertisement -

இதன் காரணமாக இந்த இருவரில் யார் டி20 உலக கோப்பை இந்திய அணியின் பிளேயிங் லெவனனில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும்? என்கின்ற பேச்சு வார்த்தைகள் சென்று கொண்டிருக்கிறது. இதுகுறித்து கம்பீரிடம் கேட்ட பொழுது அவர் வெளிப்படையாக விளக்கமாக பதில் அளித்திருக்கிறார்..

இது குறித்து அவர் பதில் அளிக்கும் போது “இருவரும் சமமான தரம் கொண்ட வீரர்கள. சஞ்சு சாம்சன் அற்புதமான தரம் கொண்டவர் என்றால் அவரைப் போலவே அற்புதமான தரம் கொண்டவர் ரிஷப் பண்ட். இருவரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டிய இடத்தில் நான் இருந்தால் ரிஷப் பண்ட்டை தேர்வு செய்வேன். ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்கிறார். ஆனால் ரிஷப் பண்ட் இயல்பாகவே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். மேலும் அவர் ஐந்து முதல் ஏழு இடங்களுக்குள் வந்து விளையாட முடியும்.

இந்திய அணியின் காம்பினேஷனை பார்க்கும் பொழுது நமக்கு
மிடில் ஆர்டரில் தான் ஒரு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் தேவைப்படுகிறது. எனவே நான் ரிஷப் பண்ட்டை வைத்துதான் துவங்குவேன். கூடுதலாக அவர் மிடில் ஆர்டரில் ஒரு இடதுகை பேட்ஸ்மேனாக இருக்கிறார். எனவே அங்கு இடது-வலது பேட்டிங் காம்பினேஷன் கிடைக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க: ரியான் பராக் இல்லை.. இந்த 32 வயது உள்நாட்டு வீரரை.. இந்திய அணிக்கு விளையாட வைங்க – ஹர்பஜன் சிங் கோரிக்கை

இந்த இருவரையும் வைத்து விளையாடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. இந்த இருவரில் ஒருவர் மட்டுமே விளையாடுவார். யார் விளையாடினாலும் அவரை அணி நிர்வாகம் ஆதரிக்க வேண்டும். மேலும் இந்த இருவரில் யார் வாய்ப்பு பெற்று விளையாடும் பொழுது சரியாக விளையாட முடியாமல் போனாலும் அவர்களை விமர்சிக்க கூடாது. அவர்களை நாம் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.