“மகன் மருமகளுடன் தொடர்பு கிடையாது.. ஜடேஜாவை கிரிக்கெட் வீரர் ஆக்கி இருக்கவே கூடாது” – தந்தை பேட்டி

0
457
Jadeja

தற்போது இந்திய கிரிக்கெட்டின் ராக் ஸ்டார் என அழைக்கப்படக்கூடிய அதிரடி வீரராக ரவீந்திர ஜடேஜா இருந்து வருகிறார். இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அவரை மூன்று வடிவிலான கிரிக்கெட் வீரராக பார்க்கிறது.

மேலும் ரவீந்திர ஜடேஜாவும் கிரிக்கெட்டின் மூன்று துறைகளிலும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் அவரது மனைவி மூலம் அரசியல் தளத்திலும் கால் பதித்திருக்கிறார்.

- Advertisement -

அவருடைய கிரிக்கெட் வாழ்வு தனிப்பட்ட வாழ்வு என பெரிய அளவில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் அவருக்கு என்று ஒரு தனி இடத்தை உருவாக்கி அமர்ந்திருக்கிறார்.

இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா தந்தை அனிருத் சிங் தன் மகன் ஜடேஜா மற்றும் தன் மருமகள் ரிவாபா இருவர் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, பரபரப்பான பல விஷயங்களை பேசி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நான் ஒரு உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். என் மகன் ஜடேஜா மற்றும் அவருடைய மனைவி ரிவாபா இருவருடனும் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. நானும் அவர்களை அழைப்பதில்லை அவர்களும் என்னை அழைப்பதில்லை. அவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று மாதங்களில் பிரச்சனை தொடங்கியது. நான் தற்போது ஜாம் நகரில் வசிக்கிறேன். அவர் தன்னுடைய பங்களாவில் அதே நகரில் இருந்து வருகிறார். ஆனால் அவரைப் பார்க்க முடிவதில்லை. அவரது மனைவி என்ன மாயம் செய்திருக்கிறார் எனத் தெரியவில்லை.

- Advertisement -

அவன் என்னுடைய மகன். ஆனால் நடந்தவைகள் என் இதயத்தை எரிப்பதாக இருக்கிறது. நான் என் மகனுக்கு திருமணம் செய்து வைத்திருக்கக் கூடாது. இல்லை கிரிக்கெட் வீரராக உருவாக்கி இருக்கக் கூடாது. இதெல்லாம் நடக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

கல்யாணமான மூன்று மாதத்தில் எல்லா சொத்துக்களையும் அவர்கள் பெயரில் மாற்ற வேண்டும் என்று பிரச்சனைகளை உருவாக்கி விட்டார்கள். குடும்பம் வேண்டாம் என்று அவர் சுதந்திரமாக இருக்க ஆசைப்பட்டார்.

ஒருவேளை நான் தவறு செய்திருக்கலாம் இல்லை ஜடேஜாவின் சகோதரி தவறு செய்திருக்கலாம். ஆனால் யோசித்துப் பாருங்கள் எங்கள் குடும்பத்தில் இருக்கும் 50 உறுப்பினர்களும் தவறு செய்திருப்பார்களா? குடும்பத்தில் யாருடனும் தற்பொழுது தொடர்பு கிடையாது. வெறுப்பு மட்டுமே இருக்கிறது.

இதையும் படிங்க : “கோலி ஓய்வு விஷயத்தில் பொய் சொல்லிட்டேன்.. என்னை மன்னிச்சிடுங்க” – ஏபி டிவிலியர்ஸ் பேச்சு

நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. நான் என் பேத்தியின் முகத்தை கூட 5 வருடங்களாக பார்க்கவில்லை. ரவீந்திர ஜடேஜாவின் மாமியார்தான் எல்லாவற்றையும் அங்கு பார்க்கிறார். அவர்கள் எல்லாவற்றிலும் தலையிடுகிறார்கள். அவர்களுக்கு இப்பொழுது ஒரு பேங்க் கிடைத்து இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.