“டிராவிட் சார் சொன்ன அந்த வார்த்தைதான்.. நான் நேற்று நல்ல விளையாட காரணம்” – சுப்மன் கில் தகவல்

0
472
Gill

இந்திய அணியில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இனி அதிக ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாட மாட்டார்கள் என்பது நிதர்சனம்.

இவர்களுக்கு அடுத்து 10 ஆண்டுகள் விளையாடக்கூடிய திறன் படைத்த புதிய இளம் பேட்ஸ்மேன்களை கண்டறிய வேண்டிய தேவை இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு இருக்கிறது.

- Advertisement -

இந்த வகையில் கடந்த ஆண்டுகளில் இந்தியா அணிக்கு நுழைக்கப்பட்டவர்தான் சுப்மன் கில். அடுத்த விராட் கோலி என்று கூறப்படும் அளவுக்கு இவருடைய பேட்டிங் திறமை இந்தியா தாண்டி வெளியிலும் கவனம் பெற்றது.

ஆனால் திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இவருடைய பேட்டிங் மோசமாகிக் கொண்டே வந்தது. மேலும் டி20 கிரிக்கெட்டிலும் இவருடைய இடம் இந்திய அணியில் உறுதியாக இல்லை. இந்த நேரத்தில் உள்ளே வந்த சில இந்திய இளம் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட இவருடைய இடத்திற்கு மிகப்பெரிய ஆபத்து உருவானது.

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தோல்விக்கு இவருடைய மோசமான பேட்டிங்கும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இரண்டாவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸிலும் மோசமான முறையில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

ஆனால் இரண்டாவது டெஸ்ட் இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று அவுட் வாய்ப்புகளில் தப்பி படைத்த அவருக்கு பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்க, அவர் அடித்த சதம் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது. இதே போல் தான் அடுத்த மூன்றாவது டெஸ்டில் 90 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து நேற்று மிக முக்கியமான நேரத்தில் மிகப் பொறுமையாக விளையாடி, இலக்கை நெருங்கியதும் இரண்டு சிக்ஸர்கள் அடித்து அரைசதத்தை எடுத்து, இந்திய அணி போட்டியையும் தொடரையும் வெல்லவும் முக்கிய காரணமாக இருந்தார்.

இதையும் படிங்க : “வெற்றியை விட முக்கியமானது.. ரோகித் சர்மா செஞ்ச இந்த வேலைதான்” – சுரேஷ் ரெய்னா பேச்சு

நேற்றைய போட்டியில் தன்னுடைய சிறப்பான செயல்பாட்டுக்கு டிராவிட் கூறிய இரண்டு வார்த்தைகள் தான் முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ள சுப்மன் கில், அந்த வார்த்தைகளை இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவாக வெளியிட்டு இருக்கிறார். அதில் டிராவிட் கூறியதாக ” நீ இல்லையென்றால் யார்? இப்போது இல்லை என்றால் எப்போது?” என்று எழுதி இருக்கிறார். இந்த வார்த்தைகளில் உத்வேகம் பெற்று போட்டியை வென்று கொடுத்ததாக கூறியிருக்கிறார்.