இன்னைக்கு இந்த விஷயத்தை நான் எதிர்பார்க்கவே கிடையாது.. ரொம்ப ஏமாற்றமா போயிடுச்சு – மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் பேச்சு

0
313
Stoinis

இன்று ஐபிஎல் தொடரில் லக்னோ அணி தங்களது சொந்த மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருது வென்ற மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் போட்டி குறித்து பேசி இருக்கிறார்.

இன்றைய போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்றதும் முதலில் பந்து வீசியது. முதல் ஓவரை வீசிய ஸ்டோய்னிஸ், பவர் பிளேவில் மொத்தமாக மூன்று ஓவர்கள் பந்துவீசி 19 ரன்கள் மட்டும் விட்டு தந்தார். மேலும் மிக முக்கியமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் அபாயகரமான பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் விக்கெட்டையும் கைப்பற்றினார்.

- Advertisement -

லக்னோ அணி பவர் பிளேவில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் மும்பை இந்தியன்ஸ் அணி அந்த இடத்திலேயே தோற்றுவிட்டது. மேற்கொண்டு அந்த அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து இலக்கை துரத்தும் பொழுது 45 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் லக்னோ அணியின் வெற்றியை உறுதி செய்தார். அந்த அணி 19.2 ஓவரில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் பேசும் பொழுது “எனக்கு சில காலமாக ஹல்க் என்ற பட்டப்பெயர் இருந்து வருகிறது. டிம் டேவிட் டேவிட் ஹல்க்கிடையாது பிக் புட் போல இருக்கிறார். அவருக்கு என்னை விட முடி அதிகமாக இருக்கிறது. புதிய பந்தில் பந்து வீசுவது நன்றாக இருக்கிறது. நான் வேகமாக வீசக்கூடியவன் இல்லை. இன்று நான் பவர் பிளேவில் மூன்று ஓவர்கள் பந்து வீசுவேன் என்று எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால் இது மகிழ்ச்சி அளிக்கிறது.

விக்கெட் கொஞ்சம் பரவாயில்லை என்று நினைத்தேன். ஆனால் இந்த விக்கெட் மெதுவாக இருக்கும் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். என்னுடைய கடைசி பார்ட்னர்ஷிப் இன்னும் எட்டு அல்லது பத்து பந்துகள் சென்று இருந்தால் போட்டி முன்கூட்டியே முடிக்கப்பட்டிருக்கும். நாங்கள் அதை மிகவும் எளிதாக செய்திருப்போம்.

- Advertisement -

இதையும் படிங்க: இந்தியாவுக்கு ஆட போற பிளேயருக்கு வாய்ப்பு தராம விட்டுட்டேன்.. தோல்வி காரணம் இதுதான் – ஹர்திக் பாண்டியா

கடினமான வேலையை பேட்டிங்கில் செய்து விட்டு, வெற்றி பெற வேண்டிய நேரத்தில், வேலையை இன்னொருவரிடம் விட்டு ஆட்டம் இழந்தது மிகவும் ஏமாற்றமான ஒன்றாக இருந்தது. எனக்கு இது லக்னோ அணியில் மூன்றாவது ஆண்டு. ஏலத்திற்கு வராமலே நான் அணிக்குள் வந்து விட்டேன். எனக்கு இங்கு நல்ல பிணைப்பு ஏற்பட்டு இருக்கிறது. நாங்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடுகிறோம் நன்றாக இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.