கிரிஸ்க்குள் இருந்த ஆயுஷ் பதோனி பேட்.. ஆனாலும் ரன் அவுட் கொடுத்த அம்பயர்.. காரணம் என்ன?

0
274
Badoni

இன்று ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் மும்பை அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், மாற்றி அமைக்கப்பட்ட கிரிக்கெட் விதியில் இருந்து, ஒரு வினோதமான ரன் அவுட் ஆயுஸ் பதோனிக்கு நடந்தது. அந்த ரன் அவுட் குறித்து களத்தில் இருந்த பூரன் மற்றும் பதோனி இருவருமே நடுவர்களிடம் தங்களது அதிருப்தியை தெரிவித்தார்கள்.

இன்றைய போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருந்த காரணத்தால், மும்பை பேட்ஸ்மேன்களால் அதுக்கு தகுந்தபடி மாறி ரண்களை அடிக்க முடியவில்லை. சொந்த மைதானத்தில் விளையாடிய லக்னோ இந்த சாதகத்தை பயன்படுத்திக் கொண்டது.

- Advertisement -

இதற்கு அடுத்து சிறிய இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல்.ராகுல் 22 பந்தில் 28 ரன்கள், தீபக் ஹூடா 18 பந்தில் 18 ரன்கள், ஸ்டோய்னிஸ் 45 பந்தில் 62 ரன்கள் எடுக்க, லக்னோ அணி வெகு எளிதாக வெற்றி பெறும் நிலைக்கு வேகமாக சென்று விட்டது. எனவே போட்டி சீக்கிரத்தில் முடிந்து விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள்.

இந்த நேரத்தில் பும்ரா தன்னுடைய கடைசி ஓவரை வீச ஆட்டத்தின் 16ஆவது ஓவருக்கு வந்தார். அவரது ஓவரை எச்சரிக்கையாக விளையாட வேண்டும் என 24 பந்துக்கு 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே லக்னோ அணி எடுத்தது. இதற்கு அடுத்து கோட்சி வீசிய 17வது ஓவரில் டர்னர் அவுட் ஆக ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆயுஷ் பதோனி ரன் அவுட்

இந்த நிலையில் உள்ளே வந்த இளம் வீரர் ஆயுஸ் பதோனி கோட்சே ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்து நெருக்கடியை குறைத்தார். அதே சமயத்தில் ஹர்திக் பாண்டியா வீசிய 18வது ஓவரில் வினோதமான முறையில் அவர் ரன் அவுட் ஆனார். மூன்றாவது நடுவர் மிகத் துல்லியமாக பார்த்து அதற்கு அவுட்கொடுத்தார். ஆனால் இந்த ரன் அட்டில் பேட் கிரீஸ்க்கு உள்ளே இருந்ததுதான் இதை வினோதமான ரன் அவுட் ஆக மாற்றுகிறது.

- Advertisement -

ஆயுஷ் பதோனி டைவ் அடித்து கிரீஸ்க்குள் பேட்டை நீட்டும் பொழுது பேட் கிரீசீன் தரையை தொடவில்லை. மாறாக பேட் கிரீஸ் உள்ளே சென்றாலும் காற்றிலேயே இருந்தது. திருத்தப்பட்ட விதியின்படி ஒருமுறை கிரீசுக்கு உள்ளே பேட் தொட்டு, அதற்கு மேல் காற்றில் இருந்தால் நாட் அவுட் என கூறப்படுகிறது. அதே சமயத்தில் கிரீசுக்குள் பேட் தரையில் ஒருமுறை கூட படாமல் தொடர்ந்து காற்றில் இருந்தால் அது அவுட் என அறிவிக்கப்படும். இந்த வகையில் தான் அவருக்கு ரன் அவுட் கொடுக்கப்பட்டது.

இதையும் படிங்க : மயங்க் யாதவ் கிட்ட நான் இன்னும் பேசல.. முதல் பந்து போட்டதும் என்கிட்ட சொன்னாரு – கேஎல் ராகுல் பேட்டி

ஆனாலும் பேட் கிரீஸ் தரையை தொட்டுவிட்டது என சில ரசிகர்கள் இதை ஏற்றுக் கொள்ளாமல் விமர்சனம் செய்கிறார்கள். மூன்றாவது நடுவர் சரியாகப் பார்த்தே, பேட் கிரீஸ் உள்ளே சென்றாலும், காற்றில்தான் இருந்தது, தரையில் இல்லை என கூறி ரன் அவுட் என அறிவித்திருக்கிறார். லக்னோ அணி முடிவில் 19.2 ஓவர்களில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.