“வெற்றியை விட முக்கியமானது.. ரோகித் சர்மா செஞ்ச இந்த வேலைதான்” – சுரேஷ் ரெய்னா பேச்சு

0
1759
Raina

இந்திய வெள்ளைப்பந்து அணிக்கு குறிப்பாக டி20 கிரிக்கெட்டுக்கு, உத்திரபிரதேசத்தில் இருந்து சிறந்த ஃபினிஷர் ஆக சமீபகாலத்தில் இடது கை இளம் பேட்ஸ்மேன் ரிங்கு சிங் கிடைத்திருக்கிறார்.

இவருடைய கடினமான காலங்களிலும், இவருடைய கிரிக்கெட் வளர்ச்சியிலும், உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அணி மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும் ஒரு குறிப்பிட்ட பங்கு இருக்கிறது.

- Advertisement -

இதேபோல் உத்தரப்பிரதேசத்தில் இருந்து சிவப்பு பந்து கிரிக்கெட்டில் இனிஷராக ஏழாவது இடத்தில் வந்து பேட்டிங் செய்வதற்கு ஒரு இளம் வலதுகை பேட்ஸ்மேன் கிடைத்திருக்கிறார். அவர்தான் துருவ் ஜுரல்.

இவருடைய பேட்டிங் டெக்னிக் பற்றி இங்கிலாந்தின் முன்னாள் ஜாம்பவான் வீரர்களான மைக்கேல் வாகன் மற்றும் குக் போன்றவர்கள் மிகவும் வியந்து புகழ்ந்து பேசி வருகிறார்கள். அந்த அளவிற்கு இவருடைய பேட்டிங் டெக்னிக் மிகவும் சிறப்பாக இருக்கிறது.

மேலும் இவருடைய திறமைக்கு இவரை ஜடேஜாவுக்கு மேல் முன்கூட்டி ஐந்தாவது இடத்தில் களம் இறக்க வேண்டும் என இங்கிலாந்து ஜாம்பவான் குக் கூறி இருக்கிறார். நடந்து முடிந்த நான்காவது டெஸ்டில் இவர் பேட்டிங் செய்த விதம் கிரிக்கெட் உலகத்தில் பெரிய கவனத்தை திருப்பி இருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்தத் தொடரில் துருவ் ஜுரல் மற்றும் சர்பராஸ் கான் இருவரும் முன்னணி வீரர்கள் இல்லாத பொழுது மிகத் தைரியமாக அணிக்குள் உள்வாங்கி அறிமுகப்படுத்தப்பட்டார்கள். மிக முக்கியமான தொடரில் ரகானே புஜாரா போன்ற அனுபவ வீரர்களை தேடிப் போகாமல், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களிடம் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் சென்றார்கள்.

இதுகுறித்து உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்த சுரேஷ் ரெய்னா கூறும்பொழுது ” ஜூரல் அற்புதமான பேட்ஸ்மேன். அவருடன் நான் உத்தரப்பிரதேச அணிக்காக இரண்டு போட்டிகள் விளையாடியிருக்கிறேன். ஜூரல் முதல் சர்பராஸ் வரை வாய்ப்புகள் கொடுத்ததற்கு ரோகித் சர்மாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் உள்ளே வந்து உடனுக்குடன் அரை சதம் அடிப்பது எளிது கிடையாது. அதுவும் நெருக்கடியான ஒரு சூழ்நிலையில் கிரிக்கெட்டில் பந்து திரும்பும் பொழுது சாதாரணம் கிடையாது.

இதையும் படிங்க : “செம்ம பேட்டிங் டெக்னிக்.. பையனுக்கு என்னா வேகம்.. இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் அடிச்சிருக்கு” – அலைஸ்டர் குக் பேச்சு

ஜூரல் பேட்டிங் மட்டும் இல்லாமல், அவருடைய விக்கெட் கீப்பிங்கிலும் நான் ஈர்க்கப்பட்டேன். அவர் ராணுவ குடும்பத்தில் இருந்து வந்தவர். அவர் எங்கு இருந்தும் எதையும் இழக்காமல் இருப்பதற்கான அச்சமற்ற மனப்பான்மையைக் கொண்டவர்” எனப் பாராட்டி இருக்கிறார்.