நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பத்தாவது போட்டியில் ஆறாவது வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றிக்கான காரணங்கள் குறித்து கேப்டன் கேஎல்.ராகுல் தனது கருத்தை கூறியிருக்கிறார்.
இன்று டாஸ் வென்ற கேஎல்.ராகுல் ஆடுகளம் மெதுவாக இருக்கும் என்பதால் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். அவரது முடிவுக்கு லக்னோ அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார்கள். மும்பை வதேரா மட்டும் சுதாரித்து 41 பந்தில் 46 ரன்கள் எடுத்தார். அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ மணிக்கு மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக ஏழு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 45 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். லக்னோ அணி எந்தவித நெருக்கடியும் இல்லாமல் 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு இழக்க எட்டி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் வெற்றிக்குப் பிறகு பேசிய லக்னோ கேப்டன் கேஎல்.ராகுல் “போட்டி கடைசி ஓவருக்கு சென்றாலும் எங்களிடம் இன்று பேட்ஸ்மேன்கள் இருந்தார்கள். அனுபவம் வாய்ந்த க்ருனால் பாண்டியா மற்றும் பூரன் இருவரும் இருந்ததால் கவலையில்லை. மும்பை இந்தியன்ஸ் அணி 160 ரன்கள் எடுத்திருந்தால் இந்த போட்டி கொஞ்சம் பரபரப்பாக சென்று இருக்கும். இங்கு வரும் எந்த அணிக்கும் ஆடுகளத்தை புரிந்து கொள்ள நேரம் எடுக்கும்.
எங்களுடைய பந்துவீச்சாளர்கள் அவர்களின் மேல் அழுத்தத்தை கொடுத்து எங்கள் அணி பேட்ஸ்மேன்களின் வேலையை எளிதாக்கினார்கள். வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளை பெறுவது எப்பொழுதும் மகிழ்ச்சி அளிக்க கூடிய விஷயம. நாங்கள் இன்னும் சில விஷயங்களில் சரியாக செல்ல வேண்டி இருக்கிறது. மேற்கொண்டுநாங்கள் இந்த விஷயங்களில் வேகமாக செல்வோம் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க : இன்னைக்கு இந்த விஷயத்தை நான் எதிர்பார்க்கவே கிடையாது.. ரொம்ப ஏமாற்றமா போயிடுச்சு – மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் பேச்சு
காயமடைந்து வெளியே சென்ற மயங்க் யாதவிடம் இன்னும் நான் பேசவில்லை.அவர் இளைஞராக இருக்கிறார். அவர் வேகமாக பந்து வீசுகிறார் என்பதை தாண்டி, அவர் இந்த வயதில் நிறைய விளையாடினால் தான் கற்றுக் கொள்ள முடியும். அவர் முதல் பந்தை வீசும் பொழுது அவருடைய உடலின் பக்கவாட்டில் வலி இருப்பதாக என்னிடம் கூறினார். அவருக்கு நாங்கள் ரசித்து பந்து வீச முழு சுதந்திரத்தையும் கொடுத்து இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.