ஐபிஎல் 2024: 2 சிஎஸ்கே பிளேயர்ஸ் உட்பட.. பாதியிலேயே கிளம்ப வாய்ப்புள்ள 10 கிரிக்கெட் வீரர்கள்

0
5684

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய வீரர்களை பொறுத்தவரை ஐபிஎல் தொடரை முடித்துவிட்டு அதற்கு பிறகு டி20 உலக கோப்பையில் பங்கு பெறுவார்கள். ஆனால் வெளிநாட்டு வீரர்களை பொறுத்தவரை டி20 உலக கோப்பைக்கு முன்பாக இருதரப்பு தொடர்களில் பங்கு பெற்று தங்களது பயிற்சியை மேற்கொள்வார்கள்.

இதனால் இந்த சீசனின் பாதியிலேயே சில வெளிநாட்டு வீரர்கள் தங்களது தேசிய அணியுடன் இணைய உள்ளனர்.பெரும்பாலும் ஐபிஎல் அணிகள் வெளிநாட்டு வீரர்கள் மீது அதிக தொகை செலுத்துகின்றனர். அவர்கள் அந்தந்த அணிகளுக்கு நல்ல பங்களிப்பை அளித்தாலும் இதே போன்ற சூழ்நிலையால் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறும் நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த தொடரில் இருந்து பாதியில் வெளியேற வாய்ப்பு உள்ள வீரர்கள் பற்றி காண்போம்.

- Advertisement -

இங்கிலாந்து வீரர்கள்: இந்த ஐபிஎல் தொடரை பொருத்தவரை ஏழு இங்கிலாந்து வீரர்கள் பாதியிலேயே வெளியேற வாய்ப்புள்ளது. இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ரீஸ் டாப்லி தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். இங்கிலாந்து அணி மே 22 முதல் 30-ஆம் தேதி வரை பாகிஸ்தான் அணியுடன் டி20 தொடரில் மோத உள்ளதால் பெங்களூர் அணியுடன் இறுதி லீக் காட்டங்களில் அவர் விளையாட வாய்ப்பு மிகவும் குறைவு. மற்றொறு இங்கிலாந்து வீரரான பில் சால்ட் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

இவரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளார். இதுவரை நான்கு போட்டியில் விளையாடி ஒரு அரை சதத்துடன் 102 ரன்கள் குவித்திருக்கிறார். பஞ்சாப் அணிக்காக தற்போது சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் லியாம் லிவிங்ஸ்டன், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் அந்த அணி தீவிரமாக விளையாடி வருகிறது. இருப்பினும் இறுதி கட்டங்களில் அவரால் விளையாட முடியாமல் போகலாம்.

மற்றொரு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான மொயின் அலி இதுவரை ஒரு போட்டி மட்டுமே சென்னை அணிக்காக விளையாடி உள்ளார். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு விக்கெடுகளை வீழ்த்தி இருக்கிறார். பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் மற்ற இரண்டு வீரர்களான ஷாம் கரண் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோரும் தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறும் நிலை ஏற்படலாம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான இங்கிலாந்தின் கேப்டன் ஜாஸ் பட்லரும் லீக் போட்டிகளில் இறுதி கட்டத்தில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது.

- Advertisement -

பாதியில் வெளியேற வாய்ப்புள்ள பிற வீரர்கள்

அயர்லாந்து வீரர்: அயர்லாந்து வீரரான ஜோஸ்வா லிட்டில் தற்போது குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் மே 10 முதல் 14ஆம் தேதி வரையிலான பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் மோத இருப்பதால் இந்த 24 வயது வீரர் மே மாத தொடக்கத்தில் வெளியேறும் நிலை ஏற்படும்.

ஜிம்பாப்வே வீரர்: ஜிம்பாப்வே அணி வீரரான சிக்கந்தர் ராசா பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். பஞ்சாப் அணிக்காக இந்த சீசனில் மூன்று போட்டிகளில் விளையாடி உள்ளார். ஜிம்பாப்வே அணி பங்களாதேஷ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதால் இந்த மூத்த வீரரும் வெளியேற வேண்டிய நிலை உருவாகலாம்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2024: விலகிய வீரர்கள் மற்றும் அவர்களுக்கான மாற்று வீரர்கள்.. முழு பட்டியல்

வங்காளதேச வீரர்: வங்காளதேச அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முஸ்தபிகுர் ரஹ்மான் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் இவர் மே 3 முதல் முதல் 12 ஆம் தேதி வரை ஜிம்பாப்வே அணியுடன் டி20 தொடர் இருப்பதால் தேசிய அணிக்கு விளையாடுவதற்காக தொடரின் பாதியில் இருந்து வெளியேற அதிக வாய்ப்புண்டு. இருப்பினும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் எடுக்கும் இறுதி முடிவை பொருத்தே இதற்கான இறுதி முடிவு தெரிய வரும்.