ஐபிஎல் 2024: விலகிய வீரர்கள் மற்றும் அவர்களுக்கான மாற்று வீரர்கள்.. முழு பட்டியல்

0
12798

இந்தியன் பிரீமியர் லீக் 2024க்கான கிரிக்கெட் தொடர் இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சிகள் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடக்க விழாவில் பங்கு பெற முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இத்தொடரில் பங்கு பெற அனைத்து வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் காயம் என்பது அணி வீரர்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. இதனால் ஒவ்வொரு அணி வீரரும் தங்கள் உடல் நலத்தை பிட்டாக வைத்துக் கொள்வது அவசியம். இருப்பினும் காயம் காரணமாக அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் வாங்கப்பட்டும் இருக்கின்றன . அவர்களைப் பற்றி காண்போம்.

- Advertisement -
குஜராத் டைட்டன்ஸ்:

முகமது சமி: இந்திய அணியின் அனுபவ வேகப்பந்துவீச்சாளரான முகமது சமி ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2023 ஆம் ஆண்டு சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியதற்காக ஊதா நிறத் தொப்பியும் இவர் வசமே இருக்கிறது. கடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் பந்து வீசியவர் கணுக்கால் காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது ஓய்வெடுத்து வருகிறார். ஆனால் இவருக்கு சரியான மாற்றுவீரரை குஜராத் அணி இன்னும் அறிவிக்கவில்லை.

மேத்யூ வேட்: மார்ச் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஆஸ்திரேலியா அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேட் முடிவு செய்துள்ளதால், குஜராத் அணி பங்குபெறும் முதல் இரு போட்டிகளில் அவர் விளையாடப் போவதில்லை என குஜராத் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. பின்னர் அடுத்தடுத்து போட்டிகளில் அவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லக்னோ சூப்பர் ஜெய்ன்ஸ்

மார்க் வுட்: லக்னோ சூப்பர் ஜெய்ன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் டி20 உலக கோப்பைக்காக அவரது பணிச்சுமையை குறைக்க முடிவு செய்துள்ள இங்கிலாந்து அணி நிர்வாகம் அவரை ஐபிஎல்லில் இருந்து வெளியேற்றி உள்ளது.
இதனால் இவருக்கு மாற்று வீரராக சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கலக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து பேச்சாளர் சமர் ஜோசப்பை லக்னோ அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

- Advertisement -
ராஜஸ்தான் ராயல்ஸ்

பிரசித் கிருஷ்ணா: கடந்த பிப்ரவரி மாதம் தசை நார் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இவர், ஓய்வு எடுத்து வரும் நிலையில் தற்போது இந்த சீசனில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். ரஞ்சிக்கோப்பையில் விளையாடிக் கொண்டிருந்தபோது காயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு சரியான மாற்றுவீரரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் இன்னும் அறிவிக்கவில்லை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஜேசன் ராய்: இங்கிலாந்து அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரர் ஜெசன் ராய் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல்லில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் கொல்கத்தா அணி நிர்வாகம் சமீபத்தில் இதே இங்கிலாந்து அணியை சேர்ந்த பில் சால்ட் என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளது.

கஸ் அட்கின்ஷன்: இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளரான கஸ் அட்கின்சன் தனது முதல் ஐபிஎல் சீசனில் இருந்து வெளியேறி இருக்கிறார். மேலும் வரும் உலகக் கோப்பையின் காரணமாக இங்கிலாந்து அணி நிர்வாகம் அவரது பணிச்சுமையை குறைக்க அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீரா சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

டெவான் கான்வே: சென்னை அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரரான நியூசிலாந்து அணியை சேர்ந்த கான்வே சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரின் போது காயமடைந்தார். சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஓய்வெடுத்து வரும் நிலையில் அவர் இந்த சீசனில் விலகி இருக்கிறார். எனவே அவருக்கு பதிலாக மாற்றுவீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் இன்னும் அறிவிக்கவில்லை.

டெல்லி கேப்பிடல்ஸ்

ஹாரி புரூக்: இங்கிலாந்து அணி அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக் தனிப்பட்ட காரணங்களால் ஐபிஎல்லில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். இவரை டெல்லிய அணி 4 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2024: சிஎஸ்கே போட்டிகளின் அட்டவணை.. போட்டி நேரம் மற்றும் மைதானங்கள்.. முழு விவரம்

இந்த அணிகளைத் தவிர மற்ற ஐந்து அணிகளான மும்பை, பெங்களூர், பஞ்சாப், டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளில் நல்வேளையாக எந்த வீரருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் அந்தந்த அணிகளின் ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான பிளேயர்களின் ஆட்டங்களை கண்டு ரசிக்கலாம்.