பும்ரா என் பேட் இல்ல கால உடைச்சிடுவார்.. அவரை பயிற்சியில விளையாடியே 2-3 வருஷம் ஆச்சு – சூரியகுமார் யாதவ் பேட்டி

0
2623
Surya

நேற்று ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரண்டாவது மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்யும் பொழுது சூரியகுமார் யாதவ் வெறும் 19 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 52 ரன்கள் குவித்து அசத்தினார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக முதல் மூன்று போட்டிகளை சூரியகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தவற விட்டார். அவர் விளையாடாத அந்த மூன்று போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்திருந்தது. அவர் அந்த நேரத்தில் காயத்தில் இருந்து மறுவாழ்வு பெற தேசிய கிரிக்கெட் அகாடமி பெங்களூரில் இருந்தார்.

- Advertisement -

இதற்குப் பிறகு மும்பை வான்கடே மைதானத்தில் டெல்லி அணிக்கு எதிரான கடந்த போட்டியில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு காயம் சரியாகி திரும்பினார். அந்த போட்டியில் ரன்கள் எதுவும் எடுக்காமல் பந்தை அடிக்க சென்று ஆட்டம் இழந்து இருந்தார். இந்த நிலையில் இன்றைய போட்டியில் அதற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து மிகச் சிறப்பாக விளையாடினார். காயத்திலிருந்து மீண்டு வந்த அவர் பழைய பார்மில் தொடர்வதை பார்ப்பது இந்திய அணிக்கு மிகவும் நல்ல விஷயமாக இருக்கிறது.

போட்டியில் வெற்றிக்கு பிறகு பேசிய சூரியகுமார் யாதவ் கூறும் பொழுது “வான்கடே மைதானத்திற்கு திரும்ப வருவது எப்பொழுதும் மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியது. இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் பொழுது நான் உடலளவில்தான் பெங்களூரில் இருந்தேன். ஆனால் நான் மனதளவில் அணியுடன் இங்குதான் இருந்தேன். இதை விட்டு வெளியே வர என்னால் முடியவில்லை.

இந்த போட்டியில் நீங்கள் 200 ரன்களை துரத்தும் பொழுது பனி இருப்பதை உணர்ந்து உங்கள் வாய்ப்புகளை எடுக்க வேண்டும். ரோகித் மற்றும் இஷான் இருவரும் முதல் பத்து ஓவர்களில் எங்களுக்கான வேலையை செய்து முடித்தார்கள். எனவே நாங்கள் எங்களுடைய ரன் ரேட்டுக்காக போட்டியை சீக்கிரத்தில் முடிக்க வேண்டும் என்று தெரியும். நான் களத்தில் விளையாடிய ஷாட்டுகளை பயிற்சியிலும் விளையாடுகிறேன். நான் என்னுடைய விளையாட்டை ரசித்து விளையாடுகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : இங்க இந்த ஈகோ மட்டும் இருக்கவே கூடாது.. என் பவுலிங் பிரச்சனைகளை இப்படித்தான் சரி செய்வேன் – பும்ரா பேச்சு

இஷான் கிஷானை சுதந்திரமாக விளையாட அணி நிர்வாகம் கூறியிருந்தது. அவரும் இதற்காக கடினமாக பயிற்சி செய்திருந்தார். தற்பொழுது அதற்கான பலன்களை அறுவடை செய்து வருகிறார். நான் பும்ராவை வலைப்பயிற்சியில் சந்தித்து இரண்டு மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. அவரை எதிர்த்து நான் பயிற்சியில் விளையாடினால், ஒன்று என்னுடைய பேட்டை உடைப்பார், இல்லை என்னுடைய காலை உடைப்பார். அதனால் அவருக்கு எதிராக விளையாடுவது இல்லை” என்று கூறியிருக்கிறார்.