இங்க இந்த ஈகோ மட்டும் இருக்கவே கூடாது.. என் பவுலிங் பிரச்சனைகளை இப்படித்தான் சரி செய்வேன் – பும்ரா பேச்சு

0
671
Bumrah

இன்று ஐபிஎல் தொடரின் 25 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்ட போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நான்கு ஓவர்களுக்கு 21 ரன்கள் தந்து ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர் பும்ரா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு பாப் டு பிளிசிஸ் 61, ரஜத் பட்டிதார் 50, தினேஷ் கார்த்திக் 53* என மூன்று பேட்ஸ்மேன்கள் அரை சதம் அடித்தார்கள். அந்த அணி 20 ஓவர்களில் 196 ரன்கள் 8 விக்கெட் இழப்புக்கு எடுத்தது. பும்ரா ஐந்து விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷான் 69 ரன், கடந்த போட்டியில் ரன் இல்லாமல் வெளியேறிய சூரியகுமார் யாதவ் 52 ரன் என அதிரடியாக எடுக்க அந்த அணி வெறும் 15.3 ஓவரில் 199 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அனாயசமாக ஆர்சிபி அணியை வென்றது.

இன்றைய ஆடுகளம் பந்து வீச்சுக்கு ஆரம்பத்தில் சாதகம் இருந்தது போலவே பேட்டிங் செய்யவும் சாதகமாக இருந்தது. இதில் ஒரே ஒரு பந்துவீச்சாளர் மட்டுமே விதிவிலக்காக பும்ரா இருந்தார். அவரை தவிர இன்றைய நாளில் இரண்டு அணிகளிலும் எல்லா பந்துவீச்சாளர்களும் ரன்களுக்கு போனார்கள். இன்றைய போட்டியில் அவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற பும்ரா பேசும் பொழுது “வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. நான் ஐந்து விக்கெட்டுகள் எடுப்பேன் என்று நினைக்கவில்லை. இன்று முதல் 10 ஓவர்களில் விக்கெட் சாதகமாக இருந்தது. கேட்சுகள் கைக்கு சென்றன. டி20 கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானது கிடையாது. எனவே நாம் பல திறன்களையும் கொண்டிருக்க வேண்டும். மேலும் ஒவ்வொருவரைப் பற்றியும் வீடியோக்கள் மூலம் நிறைய அனலைஸ் செய்யப்படுகிறது. உங்களுக்கு கடினமான நாட்கள் போட்டியில் இருக்கும். எனக்கு மோசமான நாட்கள் வரும் பொழுது, ஏன் அப்படி நடந்தது என நான் வீடியோக்களை பார்ப்பேன். அதை சரி செய்வேன்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆர்சிபி தோல்வி.. ஆனாலும் விராட் கோலி ஹர்திக் பாண்டியாவுக்காக செய்த காரியம்.. களத்தில் நெகிழ்ந்த ரசிகர்கள்

உங்களுடைய இருக்கும் அனைத்து பந்துவீச்சு திறமைகளையும் ஒரே நாளில் பயன்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. இந்த வடிவத்தில் ஈகோ இருக்க கூடாது. நீங்கள் 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடியவராக இருந்தாலும் கூட, அன்றைய நாளில் விக்கெட் மெதுவான பந்துகளுக்கு சரியாக இருக்கும் என்றால், நீங்கள் மெதுவான பந்துகளை வீச வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.