டி20 உலககோப்பை.. பக்காவான இந்திய அணியை செலக்ட் செய்த வாசிம் ஜாபர்.. குறையே இல்லை

0
55
Jaffer

இந்தியாவில் தற்பொழுது நடைபெற்று வரும் 17வது ஐபிஎல் சீசன் பாதி அளவு முடிந்து இருக்கிறது. இந்த நிலையில் இதற்கு அடுத்து ஜூன் மாத ஆரம்பத்தில் துவங்கும் டி20 உலகக் கோப்பை குறித்து பேச்சுகள் நிறைய வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் டி20 உலகக்கோப்பைக்கு தன்னுடைய பதினைந்து பேர் கொண்ட இந்திய அணியை வெளியிட்டு இருக்கிறார். பெரும்பாலும் இவர் வெளியிட்ட அணியை போலவே அமைவதற்கு தான் வாய்ப்புகள் மிக அதிகம் இருக்கிறது. மேலும் இதில் பெரிய குறைகள் என்று எதுவும் இல்லை.

- Advertisement -

மிக முக்கியமாக வாசிம் ஜாஃபர் தன்னுடைய அணியின் விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரையும் தேர்ந்தெடுத்திருக்கிறார். அடுத்து துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருக்கிறார்கள். மேற்கொண்டு மூன்றாவது துவக்க ஆட்டக்காரராக யாரையும் இவர் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது அணியில் ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா ரவீந்திர ஜடேஜா மற்றும் சிவம் துபே மூன்று பேருமே இருக்கிறார்கள். 15 பேர் கொண்ட அணி என்பதால் ரிங்கு சிங் இவரது அணியில் இடம் பெற்று இருக்கிறார். சுழல் பந்துவீச்சு ஜோடியாக குல்தீப் யாதவ் மற்றும் சாகலை வைத்திருக்கிறார்.

மேலும் இவருடைய அணியில் வேகப்பந்துவீச்சாளர்களாக ஹர்திக் பாண்டியா இருக்கின்ற காரணத்தினால் மூன்று பேரை மட்டுமே வைத்திருக்கிறார். இதில் எந்தவித புதுமுக வீரர்களுக்கும் அவர் செல்லவில்லை. பும்ரா, சிராஜ் மற்றும் அர்ஸ்தீப் சிங் இருக்கிறார்கள். மேலும் வழக்கம்போல் பேட்டிங் வரிசையில் விராட் கோலி சூர்யகுமார் யாதவ் பெறுகிறார்கள். இவர் அறிவித்திருக்கும் அணியில் எந்தவித குழப்பங்களும் இல்லாமல் எல்லா இடங்களுக்கும் சரியான வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க: சிஎஸ்கே அணிக்கு இந்த 2 பேட்ஸ்மேன் பிரச்சனை கிடையாது.. இதுதான் தொந்தரவா இருக்கு – மைக் ஹசி பேட்டி

வாசிம் ஜாஃபர் தேர்ந்தெடுத்த டி20 உலகக்கோப்பை 15 பேர் கொண்ட இந்திய அணி :

ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், ஜடேஜா, குல்தீப் யாதவ், சாகல், பும்ரா சிராஜ் மற்றும் அர்ஸ்தீப் சிங்.