“செம்ம பேட்டிங் டெக்னிக்.. பையனுக்கு என்னா வேகம்.. இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் அடிச்சிருக்கு” – அலைஸ்டர் குக் பேச்சு

0
26222
Cook

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய இளம் அணி வென்று இருக்கிறது. இதனால் இந்திய இளம் அணியின் மீது வெளிநாட்டு முன்னாள் வீரர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

அதே சமயத்தில் இந்த வெற்றியை இளம் வீரர்கள் சாதாரணமான முறையில் கொண்டு வரவில்லை. இந்திய இளம் வீரர்களின் திறமை மிகவும் கூர்மையாக இருக்கிறது. அவர்கள் வெளிக்காட்டும் கிரிக்கெட் தொழில்நுட்பங்கள் வெளிநாட்டு முன்னாள் வீரர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

- Advertisement -

இந்த வகையில் இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்து ஜெய்ஸ்வால் எல்லோரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார். இதற்கு அடுத்து சர்பராஸ் கான் இந்த வகையில் வந்தார்.

தற்பொழுது நடந்து முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் துருவ் ஜுரல் பேட்டிங் செய்த விதத்தில் இருந்து, அவர் பலரது கவனத்தையும் திருப்பி இருக்கிறார். இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டின் லெஜெண்ட் அலைஸ்டர் குக் ஜூரல் பற்றி நிறைய பாராட்டி பேசி இருக்கிறார்.

அவர் கூறும் பொழுது “என்னை கவர்ந்தது என்னவென்றால் பந்தின் லென்த்தை அவர் எப்படி உடனடியாக புரிந்து விளையாடினார் என்பதுதான். அவர் பேட்டிங் செய்யும்பொழுது பந்துக்கு தகுந்தவாறு மிக விரைவாக முடிவுகள் எடுத்தார். அவர் முன்னும் பின்னுமாக நகர்ந்து மிகச் சிறப்பாக விளையாடுகிறார்.

- Advertisement -

கில் சற்று வித்தியாசமாக விளையாடினார். அவர் பேட்டிங் டெக்னிக்கில் கிளாஸ் வீரர் என்றாலும் கூட, ஜூரல் அளவுக்கு வேகமானவர் கிடையாது. ஜுரல் பார்வேர்ட் பிரஸ் செய்யும் பொழுது மிகவும் ஷார்ப்பாக இருக்கிறார். அவர் முன்னோக்கி வந்து விளையாடுகையில் மிகவும் வேகமாக விளையாடுகிறார். அந்த வகையில் அவரால் ஒரு பெரிய ஷாட்டையும் விளையாட முடிகிறது. சிங்கிள் ரன்னும் எடுக்க முடிகிறது.

ஜடேஜா ஐந்தாவது இடத்தில் விளையாடக்கூடிய அளவுக்கு இல்லை. பாதுகாப்பாக விளையாடுவதற்கும் ரண்களைக் கொண்டு வந்து விளையாடுவதற்கும் நடுவில் ஒரு சமநிலையை கண்டுபிடித்து விளையாட வேண்டும். ஜடேஜாவுக்கு பேட்டிங்கில் அவ்வளவு திறமை இல்லை. ஆனால் தூரல் உள்ளே வந்ததும் இதை மிகச் சரியாக கால்களின் வேகத்தை பயன்படுத்தி செய்தார். எனவே ஐந்தாவது இடத்திற்கு ஜுரல் சரியாக இருப்பார். மற்றவர்கள் இல்லை” எனக் கூறியிருக்கிறார்.

.

இதையும் படிங்க : “துருவ் ஜுரல் செய்ய முடிஞ்சப்ப அவங்களால முடியாதா?.. இந்தியாவுல 50 வருஷமா இப்படித்தான்” – ரோகித் சர்மா பேச்சு