நானும் கோலியும் எப்படினு உங்களுக்கு தெரியாது.. அவர் கிட்ட இத கத்துக்க விரும்பறேன் – கம்பீர் விருப்பம்

0
228
Virat

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் களத்தில் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இருவரும் வாய்த் தகராறில் ஈடுபட்டுக் கொண்டது மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியது. ஆனால் இந்த ஆண்டு அவர்கள் இருவரும் அதை மறந்து மீண்டும் நட்பாக இருக்கிறார்கள். இதுகுறித்து கம்பீர் இன்று பேசியிருக்கிறார்.

இதற்கு முன்பாக இதுகுறித்து விராட் கோலி பேசியிருந்தபொழுது மக்கள் கிசுகிசுக்களை விரும்புகிறார்கள், ஆனால் நாங்கள் தற்போது இருவரும் நட்பாகி விட்டதால், அப்படியான எதுவும் கிடைக்காது என்பதால் மக்கள் ஏமாற்றம் அடைவார்கள் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து கம்பீர் பேசும் பொழுது “எனக்கு என்ன செய்தாலும் நடன அசைவுகள் வரவே வராது. இதனால் நான் விராட் கோலி இடம் இருந்து ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என விரும்பினால், நான் அவரிடம் இருந்து சில நடன அசைவுகளை கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.

மேலும் மீடியாக்களால் உருவாக்கப்படும் என்பது டிஆர்பிக்காக ஏற்படுத்தப்படுவது. நான் எப்படிப்பட்டவன்? விராட் கோலி எப்படிப்பட்டவர்? என்பது குறித்து மீடியாக்களுக்கு எதுவுமே தெரியாது. அவர்கள் ஹைப்பை உருவாக்குகிறார்கள். ஆனால் அப்படியான ஹைப்பை நேர்மையான வழியில் உருவாக்க வேண்டும்.

நான் சொல்வது போல சம்பந்தப்பட்ட இரண்டு பேர் முதிர்ச்சி அடைந்து சமாதானம் அடைந்தால், அவர்களின் விஷயத்தில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. மக்களின் வாழ்க்கை தனிப்பட்ட ஒன்று. இறுதியில் அது இருவருக்கு இடையிலான விஷயமாக மாறிவிடுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலககோப்பை.. பக்காவான இந்திய அணியை செலக்ட் செய்த வாசிம் ஜாபர்.. குறையே இல்லை

ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதமான ஆட்டம் இருக்கிறது. மேக்ஸ்வெல் மற்றும் விராட் கோலி இருவரும் ஒரே மாதிரி விளையாடி விட முடியாது. அதேபோல் ஒரு அணியில் எல்லோரும் அடிப்பவர்களாகவே வைக்க முடியாது. அப்படி இருக்கும் பொழுது அவர்கள் 300 இடங்கள் அடிக்கலாம் இல்லை 30 ரன்னில் கூட ஆட்டம் இழந்து விடலாம். வெற்றி பெறும்போது ஸ்டிரைக் ரேட் நூறு இருந்தால் கூட ஓகே. ஆனால் தோல்வியடையும் பொழுது 180 இருந்தால் கூட கண்டு கொள்ள மாட்டார்கள். ஸ்ட்ரைக் ரேட் என்பது கண்டிஷன் மற்றும் ஆட்ட சூழ்நிலை தொடர்புடையது” என்று கூறியிருக்கிறார்.