நைட் பார்ட்டி பண்ணிட்டு இருந்தா ஐபிஎல் கோப்பை ஜெயிக்க முடியாது – சுரேஷ் ரெய்னா வெளிப்படையான விமர்சனம்

0
340
Raina

16 ஆண்டு கால ஐபிஎல் தொடர் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து முறையும் மும்பை இந்தியன்ஸ் ஐந்து முறையும் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி பெரிய ஆதிக்கத்தை செலுத்தும் அணிகளாக இருந்து வருகின்றன. அதேசமயத்தில் கோப்பைகளை வெல்ல முடியாத அணிகள் குறித்து மிகவும் ஆச்சரியத்தக்க கருத்து ஒன்றை சுரேஷ் ரெய்னா கூறி இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் இதுவரையில் கோப்பையை வெல்லாத அணிகளாக பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் இருந்து வருகின்றன. இந்த மூன்று அணிகளில் ஓரளவுக்கு சிறந்த அணியாக ஆர்சிபி அணி இருந்திருக்கிறது. இதில் மிகவும் மோசமான செயல்பாட்டை கொண்ட அணியாக பஞ்சாப் கிங்ஸ் அணி இருந்து வருகிறது. இந்த அணி இரண்டு முறை மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் பெரிய அளவில் மைதானத்திற்கு வெளியில் கொண்டாட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு அணி நிர்வாகங்களும் போட்டி முடிந்த பிறகு இரவு பார்ட்டிகளை நடத்தியது. இதில் வீரர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் கலந்து கொள்வது வழக்கம்.

இந்த காலகட்டத்தில் ஐபிஎல் பார்ட்டியில் கலந்து கொள்ளாத இரண்டு வீரர்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் மகேந்திர சிங் தோனி இருவரும் இருந்தார்கள். பிறகு ஐபிஎல் தொடரில் சூதாட்ட புகார்கள் எழுந்ததும், இப்படியான இரவு பார்ட்டிகளை அணி நிர்வாகங்கள் வெகுவாக குறைத்துக் கொண்டன. குறிப்பாக சென்னை அணி நிர்வாகம் இரவு பார்ட்டிகளை நடத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சுரேஷ் ரெய்னா கூறும்பொழுது “சென்னை அணி எப்பொழுதும் பார்ட்டிகளை நடத்துவது கிடையாது. எனவேதான் அவர்கள் அதிகமான வெற்றிகளை பெற்றிருக்கிறார்கள். பார்ட்டிகளை நடத்தும் இரண்டு மூன்று அணிகள் இன்னும் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாமல் இருக்கின்றன. அதாவது பார்ட்டிகளை அவர்கள் மிகவும் அதிக அளவில் நடத்துவதால்தான் வெல்ல முடியவில்லை என்று கூறுகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : 3 முறை சாத்தியமே இல்ல.. அபிஷேக் ஹெட் ஆட்டத்துக்கு மத்தவங்க நன்றியோடு இருந்தாங்க – சச்சின் பாராட்டு

நீங்கள் இரவில் வெகு நேரம் பார்ட்டி செய்தால் எப்படி விளையாடுவீர்கள்? இந்தியாவின் கோடை காலத்தில் இரவு முழுவதும் பார்ட்டி செய்து விட்டால் பகல் போட்டியில் எப்படி விளையாட முடியும்? எங்கள் அணியை பொறுத்தவரையில் நாங்கள் இந்த விஷயத்தில் மிகவும் உறுதியாக இருந்தோம். எனவே நாங்கள் யாரும் பார்ட்டியில் கலந்து கொள்ள மாட்டோம். நான் இப்போது ஓய்வு பெற்று விட்டேன் எனவே இனி பார்ட்டி செய்யலாம்” என நகைச்சுவையாக கூறியிருக்கிறார்