3 முறை சாத்தியமே இல்ல.. அபிஷேக் ஹெட் ஆட்டத்துக்கு மத்தவங்க நன்றியோடு இருந்தாங்க – சச்சின் பாராட்டு

0
190
Sachin

நேற்று ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி டெல்லி அணியை மிரட்டலான முறையில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 266 ரன்கள் குவித்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் மட்டும் அந்த அணி மூன்று முறை 260 ரன்கள் கடந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது பாராட்டுகளை அந்த அணிக்கு தெரிவித்திருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் கொண்டுவரப்பட்டார். இம்பேக்ட் பிளேயர் விதி இருக்கின்ற காரணத்தினால் 160 ரன்கள் எடுப்பதால் எந்த பயனும் இல்லை என்பதை அவர் தெளிவாக கூறிவிட்டார். எனவே தாங்கள் தொடர்ந்து அதிரடியாக மட்டுமே விளையாடுவோம் என்பது அவருடைய வெளிப்படையான அறிவிப்பாக இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் அதற்கான பேட்ஸ்மேன்களை பிளேயிங் லெவனில் வைத்து முதல் பந்தில் இருந்து ஹைதராபாத் அணி தாக்குதல் பாணியில் விளையாடுகிறது. பஞ்சாப் அணிக்கு எதிராக முதல் முக்கிய நான்கு விக்கெட்டுகளை இழந்து விட்ட போதிலும் கூட, அந்த அணி தாக்குதல் பாணியில் விளையாடி 180 ரன்கள் கடந்து, அந்த போட்டியில் வெற்றியும் பெற்றது.

எனவே நடப்பு ஐபிஎல் தொடரை மிகவும் சுவாரசியமானதாக மாற்றக்கூடியதில் ஹைதராபாத் அணியின் பங்கு பெரிய அளவில் இருக்கிறது. நேற்றைய போட்டியில் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் 38 பந்துகளின் 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறார்கள். இவர்கள் துவக்க ஜோடி என்பதால் இந்த இடத்திலேயே போட்டியை மொத்தமாக முடித்து விட்டார்கள் என்று கூற வேண்டும்.

இதன் காரணமாக ஹைதராபாத் அணியின் அணுகுமுறைக்கு தனி ரசிகர் கூட்டம் உருவாகி வருகிறது. உதாரணமாக இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடும் முறைக்கு உலகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் உருவானது போல, தற்போது ஹைதராபாத் அணியின் அணுகுமுறைக்கு ஐபிஎல் அணிகள் தாண்டி ரசிகர்கள் உருவாகி வருகிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : ஹெட் பத்தி பஞ்சாப் பசங்களுக்கு தெரியும்.. அவர் எங்க பக்கம் இருக்கிறது அதிர்ஷ்டம் – அபிஷேக் ஷர்மா பேட்டி

ஹைதராபாத் அணி குறித்து சச்சின் டெண்டுல்கர் பாராட்டும் பொழுது “இந்த ஒரு சீசனில் மட்டும் அவர்கள் மூன்று முறை 260 ரன்கள் தாண்டி இருக்கிறார்கள். இது என்ன மாதிரியான ஒரு ஆட்டம்! மேலும் டெல்லியை மிஞ்சிய செயல் திறனாக இருந்தது. இதேபோல்ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா கொடுத்த, மற்றவர்கள் மிகவும் நன்றி உள்ளவர்களாக சிறப்பாக விளையாடினார்கள். ஷாபாஷ் ஆட்டத்தை முடித்த விதம் மிகவும் சிறப்பு. மேலும் பந்து வீச்சிலும் டெல்லியை விட அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். அவர்கள் நிறைய வேரியேஷன்கள் கலந்து வீசினார்கள்” என்று கூறியிருக்கிறார்.