சுனில் நரைனுக்கு ஜடேஜாவை வச்சு சிஎஸ்கே போட்ட ஸ்கெட்ச்.. வலையில் வசமாக சிக்கியது எப்படி?

0
413
Jadeja

இன்று 17 வது ஐபிஎல் சீசனில் 22 ஆவது போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது. பலம் பாய்ந்ததாக கருதப்பட்ட கேகேஆர் அணியை சிஎஸ்கே சுழல் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா அடக்கி இருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல்முறையாக டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். சிஎஸ்கே அணியில் தீபக் சகர் விளையாடாத காரணத்தினால் சர்துல் தாக்கூர் இடம் பெற்றார். மேலும் சமீர் ரிஸ்வி மற்றும் முஸ்தபிஷூர் ரஹ்மான் இருவரும் உள்ளே வந்தார்கள். மொயின் அலி நீக்கப்பட்டார். கேகேஆர் அணியில் காயம் அடைந்த ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக வைபவ் அரோரா இடம்பெற்றார்.

- Advertisement -

இன்றைய போட்டியில் துஷார் தேஷ்பாண்டே வீசிய முதல் பந்தில் பில் சால்ட் கோல்டன் டக் அடித்து வெளியேறினார். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த சுனில் நரைன் மற்றும் ரகுவன்சி இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். பவர் பிளே அவர்களுக்கு மிகச் சிறப்பாக அமைந்தது.

இந்த நிலையில் பவர் பிளே முடிந்து உள்ளே வந்த ரவீந்திர ஜடேஜா 24 ரன்கள் எடுத்திருந்த ரகுவன்சியை எல்பிடபிள்யு செய்து வெளியே அனுப்பினார். இதற்கு அடுத்து நடப்பு ஐபிஎல் தொடரில் துவக்க வீரராக வந்து அபாயகரமாக விளையாடிக் கொண்டிருக்கும் சுனில் நரைனுக்கு எதிராக ஜடேஜாவை வைத்து மிகச் சிறப்பான திட்டம் தீட்டப்பட்டது.

லெக் சைடில் வெளியில் மூன்று பீல்டர்கள் நிறுத்தப்பட்டார்கள். அதே சமயத்தில் ஆப் சைடில் வெளியில் நேராக லாங் ஆப், மற்றும் டீப் பாயிண்ட் திசைகளில் இருவர் நிறுத்தப்பட்டார்கள். டீப் பாயிண்ட் திசையில் பீல்டர் இருந்ததால் ரவீந்திர ஜடேஜா சுனில் நரைனுக்கு முதலில் பந்தை வெளியில் வீசினார். அவரால் அடிக்க முடியவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் இந்த ஒரு வீரரை நம்பிதான் இருக்கு.. அவர் வெளியே போனா அந்த டீம் காலி – முகமது கைஃப் பேட்டி

அடுத்த பந்தை ஷார்ட்டாக வேகமாக லெக் சைடு வீசினார். அந்தப் பந்தில் ஒரு ரன் மட்டுமே வந்தது. இதற்கு அடுத்து வந்த சுனில் நரைனுக்கு ஜடேஜா வெளியில் வீச, அந்தப் பந்தை டீப் பாயிண்ட் திசையில் ஆள் இருந்ததால், சுனில் நரைன் கட் ஷாட் அடிக்காமல் நேரே தூக்கி அடித்தார். அங்கு லாங் ஆப்பில் வெளியில் இருந்த தீக்சனா இடம் சிக்கினார். சுனில் நரைன் 20 பந்தில் 27 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து வெங்கடேஷ் ஐயரையும் மூன்று ரன்னில் ரவிந்திர ஜடேஜா அனுப்பி வைத்தார். இன்றைய போட்டியில் ஜடேஜா நான்கு ஓவர்கள் பந்து வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.