மும்பை இந்தியன்ஸ் இந்த ஒரு வீரரை நம்பிதான் இருக்கு.. அவர் வெளியே போனா அந்த டீம் காலி – முகமது கைஃப் பேட்டி

0
137
Bumrah

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத், ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் என தொடர்ந்து மூன்று அணிகளிடமும் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் சொந்த மைதானத்தில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் முதல் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த போட்டியின் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிக முக்கியமான வீரர் யார் என முகமது கைப் கூறியிருக்கிறார்.

முதல் மூன்று போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது அணித்தேர்வு என கூறலாம். சிறந்த வீரர்கள் கொண்ட அணியாக இருந்ததால் அதிலிருந்து சரியான பதில் தேர்வு செய்வது அவர்களுக்கு முதலில் கடினமாக இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் முகமது நபி இருவரும் நேரடியாக பிளேயிங் லெவனில் எடுக்கப்பட்டார்கள். இத்தோடு கடந்த மூன்று போட்டியாக அணியில் இடம் பெறாத சூரியகுமார் யாதவ் உடல் தகுதி பெற்று அணியில் இடம் பெற்றார். நேற்று விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி சரியான அணியாக தெரிந்தது.

இத்தோடு நேற்றைய போட்டியில் அந்த அணியின் எல்லா வீரர்களும் வெற்றிக்கு பங்களிப்பு செய்திருந்தார்கள். யாரும் தனிப்பட்ட முறையில் விளையாடி அந்த அணி வெற்றி பெறவில்லை. எப்பொழுதுமே வீரர்கள் அனைவரும் சேர்ந்து விளையாடி அணி வெற்றி பெறுவது, ஒரு அணி சாம்பியன் ஆவதற்கு மிக முக்கிய அடிப்படையான விஷயம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிக முக்கியமான வீரர் யார் என்று முகமது கைப் பேசுகையில் “மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ் மற்றும் கருதிக் பாண்டியா போன்ற முன்னணி வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் பும்ரா மட்டும்தான் மிகப்பெரிய மேட்ச் வின்னர். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு வெளியேறுவார் என்றால், அந்த அணியின் தாக்கம் குறைந்து விடும். அந்த அணியின் நட்சத்திர வீரர்களின் பட்டியலை எடுத்தால் பும்ராதான் முதலிடத்தில் இருக்கிறார். பிரித்திவி ஷா-க்கு அவர் வீசிய யார்க்கரை பாருங்கள். பந்தின் லைனில் இருந்து பேட்ஸ்மேனின் காலையை எடுத்து விட்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆர்சிபி ஃபேன்ஸ் என் குடும்பம் வரைக்குமே திட்டுவாங்க.. ஆனா வெளியில வேற நடக்கும் – தினேஷ் கார்த்திக் பேட்டி

பும்ரா ஆட்டம் முழுவதும் மிகத் துல்லியமாக இருந்தார். மேலும் மிகவும் முக்கியமான ஓவர்களை அவர் வீசினார். இந்த போட்டி ஹை ஸ்கோரிங் போட்டியாக இருந்தது. பந்துவீச்சாளர்கள் அனைவரும் பெரிய ரன்களுக்கு சென்றார்கள். ஆனால் பும்ரா நான்கு ஓவர்களில் மொத்தம் 22 ரன்ன்கள் மட்டும்தான் கொடுத்திருக்கிறார் என்பது அவர் எப்படிப்பட்ட வீரர் என்பதை காட்டுகிறது” என்று கூறி இருக்கிறார்.