எல்லாமே ஒரு ஜோக்கா இருந்திருக்கும்.. ஆனா கம்பீர்தான் அதை மாத்தினாரு – சுனில் நரைன் பேட்டி

0
42
Narine

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான பட்டியலில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சாளர் சுனில் நரைன் மூன்றாவது இடத்தில் இடம் பெற்று இருக்கிறார். இந்த மாற்றத்திற்கான காரணங்கள் குறித்து அவர் தற்பொழுது பேசியிருக்கிறார்.

நேற்றைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களுக்கு சொந்தமான கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சுனில் நரைன் 49 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்தார். மொத்தம் 59 பந்துகள் விளையாடிய அவர் 109 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அதே சமயத்தில் தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 60 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் ஜோஸ் பட்லர் 17 ரன்கள் குவிக்க, அந்த அணி தங்கள் ஏழாவது போட்டியில் ஆறாவது வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தற்பொழுது மென்டராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் இந்த வருடம் முதல் இணைந்து இருக்கிறார். அவர் அணிக்குள் வந்ததிலிருந்து கேகேஆர் அணிக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் அணி வீரர்களிடையே புதிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் களத்தில் பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் சுனில் நரைன் துவக்க ஆட்டக்காரராக சில வருடங்கள் கழித்து மீண்டும் கொல்கத்தா அணிக்கு வந்திருப்பது குறித்து அவர் பேசும் பொழுது ” நான் சில ஆண்டுகளாக ஓபனராக கொல்கத்தா அணிக்கு வரவில்லை. எனவே நான் மீண்டும் ஓபனராக திரும்பி வந்த பொழுது அது ஒரு ஜோக்காக இருந்திருக்கும். ஆனால் அணிக்குள் மீண்டும் திரும்ப வந்திருக்கும் கம்பீர் என்னால் பேட்டிங்கில் அணிக்கு நல்ல சிறப்பான துவக்கத்தை கொடுக்க முடியும் என நம்பிக்கை கொடுத்தார்.

- Advertisement -

இதையும் படிங்க :டி20 உ.கோ ஆட சுனில் நரேன் கிட்ட ஒரு வருஷமா கெஞ்சிகிட்டு இருக்கேன் – வெஸ்ட் இண்டிஸ் கேப்டன் ரோமன் பவல் பேச்சு

மேலும் ஒட்டுமொத்த அனைத்துமே நல்ல துவக்கம் பெறுவது பற்றியும், எதிரணியை குறைந்தபட்ச ஸ்கோரில் கட்டுப்படுத்துவது பற்றியும் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். மேலும் டி20 உலகக் கோப்பையில் நான் விளையாடுவேனா என்றால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும்” என்று தயக்கத்துடன் பதில் அளித்திருக்கிறார்