டி20 உ.கோ ஆட சுனில் நரேன் கிட்ட ஒரு வருஷமா கெஞ்சிகிட்டு இருக்கேன் – வெஸ்ட் இண்டிஸ் கேப்டன் ரோமன் பவல் பேச்சு

0
418

ஐபிஎல் தொடரில் இரண்டு வலுவான அணிகளான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் மோதிக்கொண்டன. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரோமன் போவல் முக்கியமான கட்டத்தில் ஆட்டத்தின் திருப்புமுனை ஏற்படுத்திய இவர் டி20 உலக கோப்பையில் சுனில் நரேன் பங்கு பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறி இருக்கிறார்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 223 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த சுனில் நரேன் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். 53 பந்துகளை எதிர் கொண்ட இவர் 13 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 109 ரன்களை விளாசினார்.

- Advertisement -

இதை அடுத்து வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் ஒரு முனையில் அதிரடியாக விளையாட, மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் விரைவிலேயே விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கினர். இதற்குப் பின்னர் 30 பந்துகளில் 80 ரன்கள் எடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய ரோமன் போவல் சுனில் நரேனின் பந்துவீச்சில் இரண்டு அபாரமான சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்திக் கொடுத்தார்.

பின்னர் மறுமுனையில் அபாரமாக விளையாடிய பட்லர் கடைசி வரை ஆட்டம் இழக்காமல், 60 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள், 6 சிக்சர்கள் என 107 ரன்கள் குவித்து ராஜஸ்தான் அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆல்ரவுண்டரான சுனில் நரேன் டி20 உலக கோப்பையில் பங்கேற்க நரைனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோமன் போவல் கூறி இருக்கிறார்.

சுனில் நரேன் பற்றி ரோமன் பவல்

சுனில் நரேன் முன்னர் சக நாட்டவரான சாமுவேல் பத்ரியிடம் உலகக்கோப்பை தொடரை வீட்டிலிருந்து பார்க்க போகிறேன் என்று கூறியிருந்தாராம். இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் தற்போதைய கேப்டன் ஆன ரோமன் போவல் இது குறித்து கூறும் பொழுது “கடந்த ஒரு வருடமாக ஓய்வை திரும்ப பெறுவது குறித்து சுனில் நரேனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்.

- Advertisement -

நரேனின் மனதை மாற்ற பொல்லார்டு, டுவைன் பிராவோ மற்றும் நிக்கோலஸ் பூரான் ஆகியோரிடமும் கூறியிருக்கிறேன். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தேர்வாளர்கள் உலக கோப்பை அணியை தேர்வு செய்வதற்கு முன்பு இவர்கள் மூவரும் சுனில் நரேனின் மனதை மாற்றுவார்கள் என நம்புகிறேன். சுனில் நரேனின் பந்து வீச்சில் அதிரடியாக விளையாடியது குறித்து கேட்கிறீர்கள்.

இதையும் படிங்க: ஜெய்ஸ்வால் நீ பேட்ஸ்மேன் மல்யுத்த வீரன் கிடையாது.. ரோகித் ஃபோன் பண்ணி பேசனும் – இந்திய முன்னாள் வீரர் பேச்சு

இந்த ஆடுகளத்தில் உணர்ச்சிகள் எங்கும் நிறைந்திருக்கின்றன. சுனில் நரேன் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் என்பதை நான் அறிவேன். அவரை நான் திட்டமிட்டு அடிக்கவில்லை. 30 பந்துகளில் 80 ரன்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலை வரும்போது, நீங்கள் உங்கள் வாய்ப்புகளை எடுத்தாக வேண்டும். எனது பலம் எனக்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தது” என்று கூறி இருக்கிறார்