லசித் மலிங்காவின் அசத்தல் ஐபிஎல் ரெக்கார்டு உடைந்தது.. சுனில் நரைன் ஈடன் கார்டனில் புதிய சாதனை

0
59
Narine

இன்று ஐபிஎல் தொடரின் 47வது போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் சுனில் நரைன் ஐபிஎல் தொடரில் ஒரு அசத்தலான சாதனையை செய்திருக்கிறார்.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் ஆச்சரியம் அளிக்கும் விதமாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். மேலும் இன்றைய போட்டிக்கான ஈடன் கார்டன் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் சாதகம் இல்லாமல் மெதுவாக இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் டெல்லி அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பிருத்வி ஷா 7 பந்தில் 13 ரன்கள், அதிரடி நட்சத்திர இளம் வீரர் ஜாக் பிரேசர் மெக்கர்க் 7 பந்தில் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இந்த இடத்திலேயே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு நெருக்கடி உருவாகிவிட்டது.

இதற்கடுத்து வந்த அபிஷேக் போரல் 18(15), ஷாய் ஹோப் 6(3), ரிஷப் பண்ட் 20(27), அக்சர் படேல் 15(27), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 4(7) ரன்கள் என முக்கிய வீரர்கள் எல்லோருமே ஆட்டம் இழந்து வெளியேறி விட்டார்கள். இதற்குப் பிறகு குல்தீப் யாதவ் யாதவ் கடைசி கட்டத்தில் வந்து 26 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உடன் 35 ரன்கள் எடுத்தார்.

இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் வரும் சக்கரவர்த்தி 4 ஓவர்கள் பந்துவீசி 16 ரன்கள் தந்து 3 விக்கெட் கைப்பற்றினார். சுனில் நரைன் 4 ஓவர்களில் 24 ரன்கள் தந்து 1 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதையும் படிங்க : 2007 டி20 உ.கோ இளம் இந்திய அணி ஒரு கட்டுக்கதை.. ஐபிஎல்ல நம்பி ஏமாறாதிங்க – இர்பான் பதான் அறிவுரை

இன்று ஈடன் கார்டன் மைதானத்தில் ஒரு விக்கெட் கைப்பற்றியதின் மூலமாக, ஐபிஎல் தொடரில் ஒரே மைதானத்தில் அதிக விக்கெட் கைப்பற்றியவர் என்கின்ற சாதனையை படைத்தார். சுனில் நரேன் கொல்கத்தா ஈடன் கார்டனில் 69 விக்கெட், லசீத் மலிங்கா வான்கடேவில் 68 விக்கெட், அமீத் மிஸ்ரா டெல்லியில் 58 விக்கெட், சாகல் பெங்களூரில் 52 விக்கெட், ஹர்பஜன் சிங் வான்கடேவில் 49 விக்கெட்டுகள் கைப்பற்றி முதல் ஐந்து இடங்களில் இருக்கிறார்கள்.