2007 டி20 உ.கோ இளம் இந்திய அணி ஒரு கட்டுக்கதை.. ஐபிஎல்ல நம்பி ஏமாறாதிங்க – இர்பான் பதான் அறிவுரை

0
9
Irfan

டி20 உலகக்கோப்பைக்கான நாட்கள் மிகவும் நெருங்கி விட்ட காரணத்தினால், ஐபிஎல் தொடரிலிருந்து டி20 உலகக்கோப்பை குறித்து நிறைய கருத்துகளும் விவாதங்களும் பெருகி இருக்கின்றன. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பைக்கு ஐபிஎல் தொடரில் இருந்து இளம் இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்படலாமா? என்பது குறித்து இர்பான் பதான் முக்கிய கருத்து ஒன்றை கூறியிருக்கிறார்.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் அன்-கேப்ட்டு இளம் இந்திய வீரர்கள் சிலரை இந்திய அணிகள் சேர்க்க வேண்டும் என்று சமூகவலைதளங்களில் பலர் பேசி வருகிறார்கள். சீனியர் வீரர்களை ஓரங்கட்ட வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் ஐபிஎல் தொடருக்கும் டி20 சர்வதேச கிரிக்கெட் நிறைய வேறுபாடு இருப்பதாகவும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அனுபவம் முக்கிய தேவையாக இருக்கும் எனவும், மேலும் முதல் டி20 உலக கோப்பையை இளம் இந்திய அணி வென்றதாக கூறுவது ஒரு கட்டுக்கதை எனவும் இர்ஃபான் பதன் பேசி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “2007ஆம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பையை இளம் இந்திய அணி வென்றது என்று கூறுவது ஒரு கட்டுக்கதை. அந்த அணி அனுபவமானது. அணியில் இருந்த 90% வீரர்களுக்கு 3 முதல் 6 ஆண்டுகால சர்வதேச அனுபவம் இருந்தது. இதற்குப் பிறகுதான் நாங்கள் உலகக் கோப்பைக்கு சென்றோம் வென்றோம். நாங்கள் வயதின் அடிப்படையில்தான் இளமையாக இருந்தோம்.

ஐபிஎல் தொடரில் சில இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்ற காரணத்தினால் நேராக அவர்களை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும என்ற அவசியம் கிடையாது. ஐபிஎல் தொடரில் சிறிய மைதானங்கள் மற்றும் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளங்கள் இருக்கின்றன.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல் பார்த்து தப்பு பண்ணாதிங்க.. இந்த பையன நேரா டி20 உலககோப்பை கூட்டிட்டு போங்க – ஸ்ரீகாந்த் கோரிக்கை

அதேசமயத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட் முற்றிலும் வேறு ஆனது. அங்கு சர்வதேச அனுபவம் பெற்ற ஐந்து பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள். ஒவ்வொருவரும் உலகக் கோப்பைக்குள் நுழைவதற்கு முன்னால், கணிசமான அளவு சர்வதேச கிரிக்கெட் விளையாடி இருப்பார்கள். வருங்காலங்களில் டி20 உலக கோப்பையில் இளம் வீரர்களை பார்க்கலாம். ஆனால் இந்த டி20 உலகக் கோப்பைக்கு தேர்வாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும் வெஸ்ட் இண்டிஸ் ஆடுகளங்கள் மெதுவாக இருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.