கோலி 120 ரன் அடித்திருப்பார்.. தப்பு அவங்க மேல தான்.. விமர்சனங்களுக்கு கவாஸ்கர் பதிலடி

0
1166

நேற்று நடைபெற்ற ஐபிஎல் பத்தாவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணிக்காக விராட் கோலி மட்டுமே தனி ஆளாக போராடி 83 ரன்கள் குவித்து இருந்தார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் விராட் கோலிக்கு நேற்று எதுவுமே கிடைக்கவில்லை என்று கூறி இருக்கிறார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ராசியான மைதானமான சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி விராட் கோலி மட்டுமே தனி ஒரு ஆளாக போராடிக் கொண்டிருக்க, ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் மற்றும் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் தவிர யாரும் பெரிய பங்களிப்பை வழங்கவில்லை.

- Advertisement -

கேமரூன் கிரீன் 33 ரன்களிலும், மேக்ஸ்வெல் 28 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறிய பிறகு அவருடன் சரியான பார்ட்னர்ஷிப் அமைத்து யாரும் விளையாடவில்லை. இதனால் விக்கெட் இழப்பினால் விராட் கோலியின் ரன் வேகமும் குறைந்தது. முதலில் ஆக்ரோஷமாக விளையாடிய விராட் கோலி 43 பந்துகளில் 62 ரன்கள் குவித்து இருந்தார். அதன் பிறகு யாரும் அவருடன் சரியான பார்ட்னர்ஷிப் அமைக்காததால் அடுத்த 16 பந்துகளில் வெறும் 21 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.

இறுதியில் தினேஷ் கார்த்திக் மட்டுமே 8 பந்துகளில் 20 ரன்கள் குவித்து பெங்களூர் அணி ஓரளவு நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். 59 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி நான்கு பவுண்டரி, நான்கு சிக்ஸர்களை விளாசி 83 ரன்கள் குவித்தார். மேலும் இறுதியில் ஆடுகளமும் ஒத்துழைக்காததால் அவரால் சரியாக ரன்கள் குவிக்க முடியவில்லை. இதனால் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்திருந்தது.

கோலி 120 ரன்களே அடித்து இருப்பார்

இந்த நிலையில் பெங்களூர் அணி விளையாடியதைப் பார்த்த இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் விராட் கோலிக்கு சரியான ஒத்துழைப்பு வழங்கி இருந்தால் அவர் 83 ரன்களுக்கு பதிலாக 120 ரன்களே அடித்து இருப்பார் என்று கூறி சரியாக ஒத்துழைப்பு வழங்காத பேட்ஸ்மேன்களை விமர்சித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்
“விராட் கோலியால் மட்டுமே எவ்வளவு தான் சிறப்பாக விளையாட முடியும். நீங்களே யோசித்துப் பாருங்கள் யாராவது அவருக்கு சரியான பார்ட்னர்ஷிப் வழங்கியிருக்க வேண்டும்.

- Advertisement -

இந்தப் போட்டியில் யாராவது அவருக்கு தகுந்த ஆதரவினை அளித்து இருந்தால், 83 ரன்கள் என்ன 120 ரன்களே எடுத்திருப்பார்.இது ஒரு குழுவாக விளையாடும் விளையாட்டு. தனிநபரால் மட்டுமே எதுவும் செய்து விட முடியாது. இன்று அவருக்கு ஆதரவாக எதுவுமே நடக்கவில்லை” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 புள்ளி பட்டியல்: 10 போட்டிகள் முடிவு.. வலுவான இடத்தில் சிஎஸ்கே.. மும்பை இந்தியன்ஸ் அணி பரிதாபம்

பின்னர் 183 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெங்களூரு அணியின் சுமாரான பந்து வீச்சினால் வெற்றி இலக்கினை எளிதாக அடைந்து 19 பந்துகளை மீதம் வைத்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் நல்ல ரன்ரேட்டில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.