டி20 உ.கோ-ல் இந்திய அணியை ஆச்சரியப்படுத்துவோம்.. பாகிஸ்தான் நம்பிக்கை கொடுத்திருக்கு – அயர்லாந்து கேப்டன் பேட்டி

0
181
Tucker

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் டிவியில் துவங்க இருக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி இடம் பெற்று இருக்கும் பிரிவில் அயர்லாந்து அணி இடம் பெற்று இருக்கிறது. இதே பிரிவில் பாகிஸ்தான் அணியும் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அயர்லாந்து கேப்டன் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட முடியும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

தற்பொழுது இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு சென்றிருக்கும் பாகிஸ்தான் அணி, இதற்கு முன்பாக இங்கிலாந்துக்கு அருகில் இருக்கும் அயர்லாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

- Advertisement -

அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய இந்த டி20 தொடரை பாகிஸ்தான அணி இரண்டுக்கு ஒன்று என கைப்பற்றியது. இந்தத் தொடரின் முதல் போட்டியை அயர்லாந்து அணி வென்றது. இரண்டாவது போட்டியை வெல்வதற்கான வாய்ப்பிலிருந்து தோற்றது. மூன்றாவது போட்டியையும் பாகிஸ்தான் அணி வென்று தொடரையும் கைப்பற்றியது.

அயர்லாந்து அணி லார்கன் டக்கர் தலைமையில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக ஒரு கிரிக்கெட் தொடரை வெல்வதற்கான அருமையான வாய்ப்பில் இருந்து அதைக் கோட்டை விட்டது. அதே சமயத்தில் இந்த தொடர் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருப்பதாக அயர்லாந்து கேப்டன் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அயர்லாந்து கேப்டன்லார்கன் டக்கர் கூறும் பொழுது “பாகிஸ்தான் அணிக்கு எதிராகப் பெற்ற முதல் வெற்றி மட்டுமே நன்றாக இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக தொடரை வென்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அந்த ஒரு வெற்றி எங்களது நம்பிக்கையை அதிகரித்து இருக்கிறது. ஜூன் 5-ம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக இது எங்களுக்கு ஊக்கமளிக்கும். எனவே இது சரியான நேரத்தில் வந்திருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : பிளெமிங் விலகுவதாக பரவிய செய்தி.. விளக்கம் கொடுத்த சிஎஸ்கே சிஇஓ.. இந்திய ரசிகர்கள் குழப்பம்

பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் மிடில் ஓவர்களை சமாளிப்பதற்காக பவர் பிளே ஓவர்களை அடித்து விளையாட விரும்பினோம். ஆனால் பாகிஸ்தானை கொஞ்சம் தற்கப்பான முறையில் அந்த நேரத்தில் விளையாடியது. ஆனால் எதிரணியாக நாங்கள் அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டோம். இது உலகக் கோப்பையில் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.