பிளெமிங் விலகுவதாக பரவிய செய்தி.. விளக்கம் கொடுத்த சிஎஸ்கே சிஇஓ.. இந்திய ரசிகர்கள் குழப்பம்

0
891

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தற்போது தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் நியூசிலாந்தைச் சேர்ந்த ஸ்டீபன் பிளமிங் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இவரை நியமிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளிப்படுகிறது.

தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ராகுல் டிராவிட் வருகிற டி20 உலக கோப்பை உடன் அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்திருப்பதாக கிரிக்கெட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து சிஎஸ்கேவின் சிஇஓ காசி விசுவநாதன் தகுந்த விளக்கம் அளித்திருக்கிறார்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008ஆம் ஆண்டு ஒரு வீரராக விளையாடிய ஸ்டீபன் பிளமிங் அதற்குப் பிறகு 2009 ஆம் ஆண்டிலிருந்து சென்னை அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இவரின் அமைதியும் இக்கட்டான நேரத்தில் எடுக்கும் முடிவுகளும் மகேந்திர சிங் தோனியோடு ஒத்துப் போவதால் இவரே தற்போது வரை வெற்றிகரமான பயிற்சியாளராக திகழ்ந்து வருகிறார்.

இவரது பயிற்சியின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் சென்னை அணிக்கு மட்டுமல்லாமல் சூப்பர் கிங்ஸ் தென்னாப்பிரிக்காவில் வாங்கியுள்ள டி20 அணிக்கும், அமெரிக்காவில் வாங்கியுள்ள டி20 அணிக்கும், மேலும் இங்கிலாந்தில் 100 பந்துகள் தொடர் கொண்ட ஒரு கிளப் அணிக்கும் பயிற்சியாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் இவரிடம் பயிற்சியாளராக பணிபுரிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியான நிலையில் சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறும்பொழுது “இது போன்ற எந்த தகவலையும் நான் கேள்விப்படவில்லை. மேலும் ஸ்டீபன் பிளம்பிங்கிடமிருந்து சிஎஸ்கேவுக்கு எந்த ஒரு அறிக்கையும் வரவில்லை” என்று கூறி இருக்கிறார்.

இவரது கூற்றுப்படி இந்திய கிரிக்கெட் வாரியம் இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இருப்பினும் ஒரு வேளை பேச்சுவார்த்தை நடத்தினால் பிளமிங் இத்தனை பயிற்சியாளர் பொறுப்புகளையும் துறந்துவிட்டு முழு நேர இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவாரா? என்பதும் சந்தேகமாகவே உள்ளது. இது இந்திய அணியின் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:நான் அந்த பவுலர் வீடியோவை 100 முறை பார்ப்பேன்.. அவர விளையாடறது கஷ்டம் – ரோகித் சர்மா பேட்டி

தற்போது இவரது பயிற்சியின் கீழ் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 7 போட்டியில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றில் இருக்கிறது. வரும் சனிக்கிழமை நடைபெற உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறும் முனைப்போடு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளோடு சென்னை அணியும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

- Advertisement -