ரோகித் கோலி கிடையாது.. எந்த பயிற்சியாளர் கேப்டனுக்கும் பிடித்த 2 வீரர்கள் இவங்கதான் – கவாஸ்கர் பேச்சு

0
72
Gavaskar

நேற்று ராஜஸ்தான் அணி தன் சொந்த மைதானமான சவாய் மான்சிங் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், வெல்ல வேண்டிய இடத்தில் இருந்து தோல்வியடைந்தது. இதுகுறித்து சுனில் கவாஸ்கர் பேசியிருக்கிறார்.

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி நான்கு ஓவர்களுக்கு குஜராத் அணியின் வெற்றிக்கு 58 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நேரத்தில் ராகுல் திவாட்டியா 11 பந்தில் 22 ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் ஆட்டம் இழந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட பொழுது, அதில் மொத்தம் 13 ரன்கள் அடித்து குஜராத் அணியின் வெற்றிக்கு ரசீத் கான் மிக முக்கியமானவராக இருந்தார்.

- Advertisement -

மேலும் நேற்றைய போட்டியில் எல்லோரும் அதிக ரன்கள் சென்ற பொழுது, ரஷீத் கான் மட்டும் நான்கு ஓவர்கள் பந்து வீசி பட்லர் விக்கெட்டை கைப்பற்றியதோடு, 18 ரன்கள் மட்டுமே விட்டு தந்தார். இவருடைய கட்டுப்பாடான பந்துவீச்சு இல்லை என்றால் நேற்று சொந்த மைதானத்தில் ராஜஸ்தான் இன்னும் அதிரடியாக விளையாடி இருக்கும்.

இது மட்டும் இல்லாமல் ரஷித் கான் பந்துவீச்சில் ரியான் பராக்குக்கு ஆரம்பத்திலேயே மாத்தி வேட் கேட்சை விட்டார். மேலும் மொத்தம் நான்கு கேட்ச் வாய்ப்பு குஜராத் வீரர்களால் வீணடிக்கப்பட்டது. நான்கு பவுண்டரிகளையும் விட்டுக் கொடுத்தார்கள். ஆனால் பீல்டிங்கிலும் ரஷித் கான் அசத்தலாக செயல்பட்டார். ஆட்டநாயகன் விருதும் அவரே பெற்றார்.

இந்த நிலையில் ரஷீத் கான் பற்றி பேசி இருக்கும் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “அவர் நேற்று நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. ஆனால் தேவைப்பட்ட பொழுது வந்து ரன்கள் அடித்துக் கொடுத்தார். இதுவே உலகெங்கும் இருக்கும் அணி உரிமையாளர்களால் அவர் விரும்பப்படுவதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது. அவர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் மட்டுமில்லாமல் பீல்டிங்கிலும் அர்ப்பணிப்போடு இருப்பார். பந்துவீச்சாளர்கள் எப்பொழுதும் பந்து வீசும் கையின் தோள்பட்டையை வைத்து டைவ் செய்யும் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். ஆனால் ரஷீத் கான் செய்வார்.

- Advertisement -

இதையும் படிங்க : பாப் டு பிளேசிஸை தூக்குங்க.. புது கேப்டனா இவரை கொண்டு வாங்க.. செம பையன் கிடைப்பான் – ஹர்பஜன் சிங் பேட்டி

ரஷித் கான் எப்பொழுதும் தன்னுடைய 100 சதவீதத்தை கொடுக்க நினைக்கிறார். இவரைப் போலவே ஒரு வீரர் இருக்கிறார் அவர் தற்போது ஐபிஎல் விளையாடவில்லை. அவர் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ். இவர்கள் எப்பொழுதும் 100% கொடுப்பார்கள். இதன் காரணமாகவே கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பிடித்த வீரர்களாக இவர்கள் எப்பொழுதும் இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.