பாப் டு பிளேசிஸை தூக்குங்க.. புது கேப்டனா இவரை கொண்டு வாங்க.. செம பையன் கிடைப்பான் – ஹர்பஜன் சிங் பேட்டி

0
436
Harbhajan

2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி பாப் டு பிளிசிஸ் சிறப்பாக விளையாடி இருந்த பொழுதும் வெளியேற்றியது. மீண்டும் அவரை ஏலத்தில் சிஎஸ்கே வாங்க முயன்ற பொழுது ஆர்சிபி அணி அதிக தொகைக்கு சென்று அவரை வாங்கியது. தற்பொழுது இவரை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.

2022 ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்கு வாங்கப்பட்ட பாப் டு பிளிசிஸ் அந்த அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். மேலும் அந்த ஆண்டு அவர் தலைமையில் பிளே ஆப் சுற்றுக்கு ஆர்சிபி அணி சென்றது. மற்ற ஆண்டுகளை விட அந்த ஆண்டு ஆர்சிபி அணி நன்றாகவே செயல்பட்டது.

- Advertisement -

கடந்த ஆண்டு ஆர்சிபி அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்ற பொழுதும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக ரன் ரேட்டிங் காரணமாக, பவர் பிளேவுக்கு செல்லும் வாய்ப்பை துரதிஷ்டவசமாக இழந்தது. தொடர்ந்து அந்த அணியின் ஐபிஎல் கோப்பை வாய்ப்பு கனவாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் செயல்பாடு ஒட்டுமொத்தமாக மிக மோசமாக இருக்கிறது. விராட் கோலி மட்டுமே தனி ஒரு வீரராக இருந்து அந்த அணியை தூக்கி நிறுத்தி வருகிறார். அவர் ஐந்து போட்டியில் 300க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்திருக்க, மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் இன்னும் நூறு ரண்களை கூட அடிக்காதது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை கொடுத்திருக்கிறது. மேலும் கேப்டனாக பாப் டு பிளிசிஸ் விளையாடுவதால், சிறப்பான ஃபார்மில் இருக்கும் வில் ஜேக்ஸ்க்கு வாய்ப்பு தர முடியவில்லை.

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் இந்திய அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சு நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் கூறும் பொழுது ” விராட் கோலியை கேப்டன் ஆக்குங்கள் என்று நான் சொல்கிறேன். அவரை கேப்டன் ஆக்கினால் குறைந்தபட்சம் அந்த அணி எதிரணிகளுக்கு எதிராக சண்டை செய்யும். நிச்சயம் விராட் கோலி தன்னுடைய அணியை அப்படியானதாக வைத்திருப்பார்.

- Advertisement -

இதையும் படிங்க : நான் அஸ்வினுக்கு எதிரானவனா?.. சஞ்சு சாம்சன் பண்ணது அர்த்தமே இல்லை – டாம் மூடி விமர்சனம்

இப்பொழுது பாப் டு பிளிசிஸ் கேப்டனாக அணியில் தொடர்ந்து விளையாடி வருகின்ற காரணத்தினால், உலகமெங்கும் டி20 லீக்குகளில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் வில் ஜேக்ஸ் போன்ற ஒரு வீரர் வெளியில் அமர்ந்திருக்க வேண்டிய காரணமாக இருக்கிறது. எனவே அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி வெளியே வைத்து விடுங்கள். துவக்க இடத்தில் இந்த புது வீரர் விளையாடட்டும் என்று கூறியிருக்கிறார்.