டி20 உலககோப்பை சிராஜ மாத்திடுச்சு.. ஸ்மித்துக்கு அவர் செஞ்ச ஒரு சம்பவம் சாதாரணமில்ல – கவாஸ்கர் பாராட்டு

0
140
Siraj

நேற்று பெங்களூர் அணி தங்களது சொந்த மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நான்கு விக்கெட் வித்தியாசத்தில் 13.4 ஓவரில் எளிதான வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருது வென்ற முகமது சிராஜை சுனில் கவாஸ்கர் பாராட்டி இருக்கிறார்.

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீசியது. குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சகா மற்றும் கேப்டன் சுப்மன் கில் இருவரையும் முகமது சிராஜ் தன்னுடைய சிறப்பான பந்துவீச்சின் மூலமாக வெளியேற்றி நல்ல துவக்கத்தை பெங்களூர் அணிக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்.

- Advertisement -

மேலும் நேற்று கடைசி இரண்டு ஓவர்களை கடைசி கட்டத்தில் வீசிய முகமது சிராஜ் சிறப்பான முறையில் வீசினார். அவர் மொத்தம் நான்கு ஓவர்கள் பந்துவீசி 29 ரன்கள் விட்டுத் தந்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் காரணமாக அவருக்கே ஆட்டநாயகன் விருதும் கொடுக்கப்பட்டது. மேலும் நேற்று உடல்நிலை சரியில்லாத போதும் அணிக்காக விளையாடி வென்றிருக்கிறார்.

இத்தோடு டி20 உலகக்கோப்பையில் முகமது சிராஜை தேர்வு செய்திருந்தது பெரிய அளவில் பலராலும் விமர்சிக்கப்பட்டது. டி20 உலக கோப்பையில் பவர் பிளே மற்றும் இறுதிக்கட்ட ஓவர்களில் பந்து வீச வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கும். இதன் அவசியத்தை உணர்ந்த அவர் நேற்று மிகச் சிறப்பான முறையில் திரும்பி வந்தார். மேலும் அவருடைய பந்து வீச்சு லைன் மற்றும் லென்த் அற்புதமாக இருந்தது.

இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசும்பொழுது “இந்திய அணிக்காக விளையாடுவது முக்கியம் என சிராஜ் உணர்ந்து இருக்கிறார். ஆனால் அவர் தற்போது தன்னை சரியாக நிலை நிறுத்திக் கொள்ளவில்லை. ஆனால் அவர் தன்னை ஏற்கனவே நிரூபித்து விட்ட ஒரு வீரர். எனவே அவர் 100% திரும்பி வரவேண்டும் என நினைத்திருப்பார். நீங்கள் கொஞ்சம் சரியில்லாமல் இருக்கும் பொழுது, ஆனால் இந்திய அணியில் உங்களுடைய இடத்தை நீங்கள் விரும்பும் பொழுது, நீங்கள் அதற்கான விஷயங்களில் ஒட்டிக் கொள்கிறீர்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றிலேயே.. இந்த ஆர்சிபி பிளேயருக்கு தகுதிக்கு மீறி மரியாதை கிடைக்குது – பார்த்திவ் படேல் விமர்சனம்

மேலும் ஆஸ்திரேலியாவில் வரலாற்று சிறப்புமிக்க காபா டெஸ்ட் போட்டியில் சிராஜ் பந்துவீச்சை பாருங்கள். அந்தப் போட்டியில் 55 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த ஸ்மித் விக்கெட்டை அவர் வீழ்த்தினார். ஸ்மித் விக்கெட்டை ஆரம்பத்தில் கைப்பற்றுவது என்பது வேறு. ஆனால் அவர் செட்டாகி அரைசதம் அடித்த பிறகு அவரது விக்கட்டை கைப்பற்றுவது என்பது வேறு. இதுவே சிராஜின் பலம் மற்றும் தன்னம்பிக்கை. எப்பொழுதும் விட்டுக் கொடுக்காத மனப்பான்மை அவரிடம் இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.