நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் எட்டு போட்டிகளில் ஆர்சிபி அணி 7 தோல்விகள் அடைந்து, ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை அதிகபட்சம் இழந்தது. இந்த நிலையில் அதற்கு அடுத்து தொடர்ந்து மூன்று போட்டிகளை வென்றிருக்கிறது. தற்பொழுது ஆர்சிபி அணியில் உள்ள ஒரு வீரர் குறித்து பார்த்திவ் பட்டேல் கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு முதல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக தோல்வியும், இரண்டாவது போட்டியில் சொந்த மைதானத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக வெற்றியும் கிடைத்தது. அதற்குப் பிறகு அங்கிருந்து தொடர்ச்சியாக அந்த அணி ஆறு போட்டிகளில் தோற்று மிகப்பெரிய விமர்சனங்களுக்கு உள்ளானது.
இதைத்தொடர்ந்து அதிகபட்சமாக இந்திய பந்துவீச்சாளர்களை நம்பி, எல்லா வெளிநாட்டு பேட்ஸ்மேன்களையும் களம் இறக்கி, ஆர்சிபி வித்தியாசமான முறையில் அதிரடியாக விளையாடிக் கொண்டு வருகிறது. இதன் காரணமாக அந்த அணி கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளையும் பெற்று, 11 போட்டிகளில் 8 புள்ளிகள் எடுத்து ஏழாவது இடத்தில் இருக்கிறது. இதன் காரணமாக பிளே ஆப் வாய்ப்பு கொஞ்சம் இருக்க செய்கிறது.
இந்த நிலையில் நேற்று தங்களது சொந்த மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அந்த அணியை 147 ரன்களுக்கு ஆர்சிபி கட்டுப்படுத்தியது. இதைத்தொடர்ந்து விளையாடும் பொழுது பவர் பிளேவில் மட்டுமே 92 ரன்கள் எடுத்தது. ஆனால் மேற்கொண்டு 25 ரன்கள் எடுத்து, 117 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து விட்டது.
திடீரென கையில் இருந்த போட்டி மோசமான முறையில் நழுவுவது போல் மாறியது. சரிவர பார்மில் இல்லாமல் தானே அணியை விட்டு வெளியில் இருந்த மேக்ஸ்வெல், மீண்டும் சில போட்டிகளாக ஆர்சிபி அணிக்குள் வந்திருக்கிறார். நேற்றைய போட்டியில் மிக முக்கியமான நேரத்தில் உள்ளே வந்து ஒரு பவுண்டரி அடித்த அவர், மேற்கொண்டு இரண்டு பந்துகளை சந்தித்து, மூன்று பந்தில் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றத்தை உண்டாக்கினார்.
இதையும் படிங்க : உடம்பு முடியாமதான் போட்டிக்கு வந்தேன்.. ஒரு மாற்றம்தான் ரொம்ப கஷ்டமா இருக்கு – முகமது சிராஜ் பேட்டி
தற்போது இது குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பார்த்திவ் படேல் விமர்சனம் செய்யும் பொழுது “ஐபிஎல் வரலாற்றிலேயே ஆர்சிபி அணியின் கிளன் மேக்ஸ்வெல்தான், மிகவும் ஓவர் ரேட்டேட் ஆன பிளேயர்” என்று வெளிப்படையாகவே விமர்சனம் செய்திருக்கிறார். பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி, பெரிய சம்பளத்தையும் வாங்கும் அவர், அதற்கேற்ற வகையில் இதுவரை விளையாடியது இல்லை என்கின்ற வகையில் அவர் விமர்சனம் அமைந்திருக்கிறது.
glenn maxwell….HE IS THE MOST OVERRATED player in the history of ipl…#IPL2024 ….
— parthiv patel (@parthiv9) May 4, 2024