ஐபிஎல் நல்லாவே இல்ல.. பிசிசிஐ தயவு செய்து இதை மாத்தி வைங்க.. அப்பதான் சரிவரும் – கவாஸ்கர் கோரிக்கை

0
169
Gavaskar

நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மட்டுமே மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறது. எந்த ஐபிஎல் தொடரிலும் இல்லாத அளவுக்கு சிக்ஸர் மழை பொழிகிறது. இதைக் கட்டுப்படுத்தி பந்துவீச்சாளர்களை காப்பாற்ற சுனில் கவாஸ்கர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிகபட்ச சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு வருகின்றன. மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டு முறை ஐபிஎல் தொடரில் அதிகபட்ச அணியின் ரன்னை பதிவு செய்திருக்கிறது. தொடர்ந்து பந்துவீச்சாளர்களால் எதுவும் செய்ய முடியாமல், மொத்தமாக பேட்ஸ்மேன்களின் ஆட்டமாக ஐபிஎல் தொடர் மாறி இருக்கிறது.

- Advertisement -

ஒருபுறம் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும் அதே வேளையில், இம்பேக்ட் பிளேயர் விதியின் மூலம் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை பெற முடிவதால், முதல் பந்தில் இருந்து எல்லா அணிகளும் தாக்கி விளையாட ஆரம்பிக்கின்றன. இதன் காரணத்தால் பந்துவீச்சாளர்களின் நிலைமை ஐபிஎல் தொடரில் மிகவும் பரிதாபமாக இருக்கிறது.

கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளருக்கான போட்டியாக இருக்க வேண்டும். மாறாக ஐபிஎல் தொடரில் இரண்டு அணிகளின் பேட்ஸ்மேன்களுக்கு இடையேயான போட்டியாக கிரிக்கெட் மாறி இருப்பது வருத்தம் அளிக்கிறது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் லெஜென்ட் சுனில் கவாஸ்கர் முக்கியமான ஆலோசனை ஒன்றை கூறி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது “நான் கிரிக்கெட் பேட்டில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர சொல்ல மாட்டேன். ஏனென்றால் அவை விதிகளுக்கு உட்பட்டு மிகவும் சரியாக இருக்கிறது. ஆனால் பவுண்டரி எல்லைகளை இன்னும் கொஞ்சம் பெரியதாக மாற்றலாம். நேற்று போட்டி நடந்த இடத்தில் சில மீட்டர் இடம் மைதானத்தில் காலியாக இருந்தது. இதனால் பவுண்டரி எல்லையை கொஞ்சம் தூரமாக வைத்திருக்கலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல்-ல் விலை போகாத கருண் நாயர்.. இங்கிலாந்தில் இரட்டை சதம்.. 253 பந்தில் மாஸ் சம்பவம்

இப்படி ஒன்று இரண்டு மீட்டர்கள் பவுண்டரி எல்லையை தூரமாக வைப்பதன் காரணமாக, சிக்ஸருக்கும் விக்கெட்டுக்குமான வித்தியாசத்தை குறைக்கலாம். ஒரு மீட்டர் அதிகப்படுத்துவதின் மூலமாக கூட, ஒரு சிக்ஸர் பந்து விக்கெட் ஆக மாறும். கடைசி சில நாட்களாக ஐபிஎல் தொடரில் நாம் பார்த்துக் கொண்டிருப்பது என்னவென்றால், பேட்டிங் பயிற்சியில் கடைசி நேரத்தில் தாறுமாறாக அடித்து விளையாடுவது போல பேட்ஸ்மேன்கள் அடித்துக் கொண்டிருப்பதைதான் பார்க்கிறோம். ஆரம்பத்தில் இது உற்சாகமாக இருக்கும். ஆனால் தற்பொழுது இதைப் பார்ப்பதற்கு நன்றாக உற்சாகமாக இல்லை” என விமர்சித்திருக்கிறார்