ஐபிஎல்-ல் விலை போகாத கருண் நாயர்.. இங்கிலாந்தில் இரட்டை சதம்.. 253 பந்தில் மாஸ் சம்பவம்

0
43
Karun

இந்திய கிரிக்கெட்டில் ஆறு டெஸ்ட் போட்டிகளில் ஏழு இன்னிங்ஸ்களில் மட்டுமே விளையாடி, அதில் ஒரு இன்னிங்ஸில் முச்சதம் அடித்து 374 ரன்கள் குவித்தவர் கருண் நாயர். இதற்குப் பிறகு அவருக்கு இந்திய அணியில் இடமே கிடைக்கவில்லை. இன்று வரை இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கான காரணம் யாருக்குமே புரியாது ஒன்று. இந்த நிலையில் இவர் இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் இரட்டை சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.

கருண் நாயர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மினி ஏலத்தில் பெயர் கொடுத்திருந்தார். சிஎஸ்கே ரகானேவை வாங்கும் பொழுதே அவருடைய இடத்தில், இவரை வாங்கும் என்று பலரும் நினைத்திருந்தார்கள். ஆனால் சிஎஸ்கே நிர்வாகம் ரகானே வாங்கியது. இவர் விலை போகாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்திலும் இவர் விலை போகவில்லை.

- Advertisement -

மேலும் இவர் தற்பொழுது உள்நாட்டு கிரிக்கெட்டில் சொந்த அணியான கர்நாடக மாநில அணியில் இருந்து விலகி, தற்பொழுது விதர்பா அணிக்காக விளையாடுகிறார். இந்த ஆண்டு ரஞ்சி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற விதர்பா அணியில் இடம் பெற்று சிறப்பாகவும் விளையாடி இருந்தார்.

ஐபிஎல் தொடரில் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த காரணத்தினால், இவர் கடந்த ஆண்டு கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்று, அங்கு நார்த்தாம்டன்சையர் அணிக்காக விளையாட ஆரம்பித்தார். கடந்த ஆண்டில் அந்த அணிக்காக சதமும் அடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் நார்த்தாம்டன்சையர் அணிக்காக, கிளாமர்கன் அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்து அசத்தியிருக்கிறார். இவர் மொத்தம் 253 பந்துகள் சந்தித்து, ஆட்டம் இழக்காமல் 202 ரன்கள் எடுத்தார். இவருடைய அணி முதல் இன்னிங்ஸில் 605 ரன்கள் குவித்து இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : டூ பிளசிஸ் இப்படி பேசுனது ரொம்ப தப்பு.. ரோகித் எப்பவாவது சொல்லி இருப்பாரா – ரெய்னா விமர்சனம்

இவர் ஐபிஎல் தொடரில் முதல்முறையாக 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் ஆர்சிபி அணிக்காக விளையாடினார். 2014, 2015 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காகவும், 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடியிருக்கிறார்.