“இதுதான் கிரிக்கெட் வீரர்களுக்கு தரும் மரியாதையா? ஏன் லேட்?” – பிசிசிஐ மீது கவாஸ்கர் விமர்சனம்

0
311
Gavaskar

இந்திய கிரிக்கெட்டில் மாஸ்டர் என்று அழைக்கப்படுபவர் சுனில் கவாஸ்கர். எண்பதுகளில் விளையாடி ஓய்வு பெற்று இருந்தாலும் கூட, அவருடைய பேச்சுக்கு இன்றளவும் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் உலகக் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய பொழுது அவர்களுடைய வேகப்பந்து வீச்சுப்படை மிகவும் அச்சுறுத்தல் தரக்கூடிய ஒன்றாக இருந்தது. இப்பொழுது வரை கூட எந்த அணிக்கும் அப்படியான வேகப்பந்து வீச்சு தாக்குதல் அமையவில்லை என்று கூறலாம்.

- Advertisement -

அப்படியான வேகப்பந்து வீச்சு கூட்டணிக்கு எதிராக, ஹெல்மெட் கூட இல்லாமல் விளையாடி பல சதங்கள் அடித்தவர் கவாஸ்கர். இன்றளவும் பேட்டிங் தொழில்நுட்பத்தில் தலைசிறந்த வீரர்களில் அவரும் ஒருவர்.

ஓய்வுக்குப் பிறகு தொடர்ச்சியாக கிரிக்கெட் வர்ணனையில் நாடு நாடாக பறந்து கொண்டிருப்பவர். பேட்மேன்கள் செய்யும் தவறுகளை அப்பொழுதே மிகச் சரியாக கனித்து உடனே கூறி விடுவார். இப்பொழுது மிகத் தைரியமாக பிசிசிஐ மீது தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

இந்தியாவின் மிக மூத்த கிரிக்கெட் வீரரான தத்தாஜி கெய்க்வாட் சில நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய அணி நேற்று கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடியது. இதில் இந்திய கிரிக்கெட் வாரியம் செய்த ஒரு தவறு என்னவென்றால், போட்டி துவங்கும் பொழுதே இந்த அஞ்சலியை அவருக்கு செய்யவில்லை.

- Advertisement -

இதுகுறித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “இவர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவதை போட்டியின் முதல் நாளிலேயே செய்திருக்க வேண்டும். ஆனால் எப்போதும் இல்லாத அளவுக்கு தாமதமாக இதைச் செய்து இருக்கிறார்கள். இது பெரிய தகவல் தொடர்பு குறைபாடு எனக் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : 71 வருடத்தில் 6வது வீரர் கில்.. தோனிக்கு அடுத்து 12 வருடம்.. வித்தியாச பட்டியலில் சேர்ந்தார்

பிசிசிஐ தன்னுடைய அறிக்கையில் அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், அபிமானிகளுக்கு தங்களுடைய இதயபூர்வமான இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியிருக்கிறது.