71 வருடத்தில் 6வது வீரர் கில்.. தோனிக்கு அடுத்து 12 வருடம்.. வித்தியாச பட்டியலில் சேர்ந்தார்

0
270
Gill

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று களத்தில் இருந்த சுப்மன் கில் மற்றும் நைட் வாட்ச்மேன் குல்தீப் யாதவ் இருவரும் இன்று தொடர்ந்து விளையாடினார்கள்.

- Advertisement -

குல்தீப் யாதவ் நைட் வாட்ச்மேன் என்கின்ற காரணத்தினாலும், இந்திய அணி நல்ல ரன்கள் எடுத்திருப்பதாலும், அவரே முதலில் தாக்கி ஆட வேண்டும் என்கின்ற சூழ்நிலை இருந்தது. ஏனென்றால் அப்பொழுது கில் தாக்கி விளையாடி ஆட்டம் இழப்பது சரிவராது.

இந்த திட்டத்திற்கு மிகச் சரியாக குல்தீப் யாதவ் பவுண்டரி சிக்சர் என தைரியமாக அடித்து விளையாடினார். அதே சமயத்தில் கிடைக்கும் தவறான பந்துகளில் கில்லும் நன்றாக பவுண்டரிகள் அடித்துக் கொண்டார்.

இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி 50 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள். கில் இந்த தொடரில் தன்னுடைய இரண்டாவது சதத்தை நோக்கி மிக வேகமாக சென்று கொண்டிருந்தார்.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டி இந்த தொடரில் முடிந்த பிறகு சுப்மன் கில் அடுத்து அணியில் இருப்பாரா என்பதே பெரிய கேள்விக்குறியாக இருந்த நிலையில், அவர் இரண்டாவது சதத்தை எடுக்கும் அளவுக்கு வந்திருப்பது மிக நல்ல அறிகுறியாக இருந்தது.

இந்த நேரத்தில் குல்தீப் யாதவ் நேராக ஸ்டோக்ஸ் இடம் பந்தை அடிக்க, சுப்மன் கில் எதிர்பாராத விதமாக ஓடிவிட்டார். ஸ்டோக்ஸ் கொஞ்சமும் தாமதிக்காமல் பந்தை பந்துவீச்சாளரிடம் சரியாகக் கொடுக்க, கில் 91 ரன்னில் பரிதாபமாக ரன் அவுட் ஆகி சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

டெஸ்ட் கிரிக்கெட் இந்திய வீரர் 90 ரன்கள் மேல் எடுத்து ரன் அவுட் ஆகும் நிகழ்வு இத்துடன் ஆறாவது முறையாக நடைபெற்று இருக்கிறது. முதல் முதலில் வினு மன்காட் 96 ரன்களில் 1953 ஆம் ஆண்டு ரன் அவுட் ஆகியிருந்தார். அதற்கு அடுத்து தற்பொழுது 71 வருடங்களில் இது ஆறாவது நிகழ்வு

இதற்கு முன்பாக மகேந்திர சிங் தோனி 2012ஆம் ஆண்டு 99 ரன்களில் ரன் அவுட் ஆகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : திரும்ப வந்து கொண்டிருக்கும் அஷ்வின்.. எப்போது இணைவார்? பந்து வீச முடியுமா?.. பிசிசிஐ புதிய அறிவிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்டில் 90 ரன்கள் மேல் எடுத்து ரன் அவுட் ஆன இந்திய வீரர்கள் :

96 – வினு மங்காட் (1953)
99 – எம் ஜெய்சிம்ஹா (1960)
90 – டி வெங்சர்க்கார் (1982)
96 – அஜய் ஜடேஜா (1997)
99 – எம்எஸ் தோனி (2012)
91 – சுப்மன் கில் (2024)