17.5 ஓவர்.. 5வது முறையாக சிஎஸ்கேவை வீழ்த்திய பஞ்சாப்.. பிளே ஆஃப்க்கு ஏற்பட்ட புதிய சிக்கல்

0
1133
CSK

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று சிஎஸ்கே அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சந்தித்து விளையாடியது. இந்த போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி சிஎஸ்கே அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்தி இருக்கிறது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கேப்டன் சாம் கரன் முதலில் பந்து வீசுவது என அறிவித்தார். சிஎஸ்கே அணிக்கு பேட்டிங்கில் ரகானே 24 பந்தில் 29, சிவம் துபே 0, ரவீந்திர ஜடேஜா நான்கு பந்தில் இரண்டு ரன்கள் என தொடர்ந்து அடுத்தடுத்து வெளியேற சிஎஸ்கே அணிக்கு நெருக்கடி உருவானது.

- Advertisement -

இதற்கு அடுத்து கேப்டன் ருதுராஜ் மற்றும் இளம் வீரர் சமீர் ரிஸ்வி இருவரும் 37 பந்தில் 37 உடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். சமீர் ரிஸ்வி போராடி 23 பந்தில் 21 ரன்கள் எடுத்தார். சிறப்பாக விளையாடிய ருதுராஜ் 48 பந்தில் 62 ரன்கள், மொயின் அலி 9 பந்தில் 15 ரன்கள், தோனி 11 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. ராகுல் சாஹர் மற்றும் ஹர்பரித் பிரார் இருவரும் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் பிரப்சிம்ரன் சிங் 10 பந்தில் 13 ரன்கள், ஜானி பேர்ஸ்டோ 30 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்து விட்டார்கள். இந்த நிலையில் மூன்றாவதாக வந்த ரயிலி ரூசோவ் அதிரடியாக 23 பந்தில் 43 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி எளிமையானது. ஷஷாங்க் சிங் 26 பந்தில் 25 ரன், கேப்டன் சாம் கரன் 20 பந்தில் 26 ரன்கள் எடுக்க, பஞ்சாப் கிங்ஸ் அணி 17.5 ஓவர்களில், மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது பத்து போட்டியில் ஐந்து வெற்றி பெற்ற சிஎஸ்கே புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திலும், பத்து போட்டியில் நான்கு வெற்றி பெற்ற பஞ்சாப் ஏழாவது இடத்திலும் இருக்கிறது. சிஎஸ்கே அணி அடுத்த நான்கு போட்டியில் மூன்று போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்தத் தோல்வி சிஎஸ்கே அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பை கடினம் ஆகிவிட்டது.

இதையும் படிங்க : தல தோனிக்கு சுட்டிக் குழந்தை சாம் கரன் செய்த காரியம்.. பிரமித்து போய் புகழும் ரசிகர்கள்

மேலும் சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் நான்காவது வெற்றி இதுவாகும். சிஎஸ்கே அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் ஐந்து முறை வெற்றி பெற்று மும்பை முதலிடத்தில் இருக்கிறது. மேலும் சிஎஸ்கே அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி தொடர்ந்து ஐந்தாவது முறையாக தோற்கடித்திருக்கிறது. இதற்கு முன்பு மும்பை அணி சிஎஸ்கே அணியை ஐந்து முறை தொடர்ந்து தோற்கடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -