“ஸ்ரேயாஸ் ஐயருக்கு நடந்தது அநியாயம்.. நீங்களே பாருங்க” – ஆதாரத்தை அடுக்கிய கவாஸ்கர்

0
86
Shreash

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சம்பள பட்டியலில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இசான் கிஷான் இருவரும் நீக்கப்பட்டது பெரிய பிரச்சினையாக மாறிக் கொண்டே வருகிறது.

இஷான் கிஷான் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் மனச்சோர்வு என்று காரணம் கூறி விலகிக் கொண்டார். மேலும் அவர் தனது மாநில அணிக்காக ரஞ்சி கிரிக்கெட் விளையாடவில்லை. அத்தோடு தனது ஐபிஎல் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து பரோடாவில் பயிற்சியில் ஈடுபட்டார்.

- Advertisement -

இதன் காரணமாக அவரை தேர்வுக்குழுவினர் புறக்கணித்ததற்கும், மேலும் சம்பள பட்டியலில் அவரை சேர்க்காமல் விலக்கியதற்கும் நியாயமான காரணங்கள் இருக்கிறது.

ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவும் மும்பை அணிக்காக ரஞ்சி கிரிக்கெட் விளையாடினார். ஆனால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பிறகு காயம் காரணம் கூறி விளையாடவில்லை.

இந்த இடத்தில்தான் இசான் கிஷான் நீக்கப்பட்டதைப் போல ஸ்ரேயாஸ் ஐயரை நீக்கி இருக்கக் கூடாது எனக்குரல்கள் எழுந்து வருகின்றன. மேலும் அவர் நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிடில் வரிசையில் 500க்கு மேல் ரன்கள் குறித்த முதல் பேட்ஸ்மேன் என்கின்ற சாதனையையும் படைத்திருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” அவர் ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை மாநில அணிக்காக கால் இறுதி போட்டியில் விளையாடவில்லை. ஆனால் அவர் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய பொழுது முதுகில் வலி இருப்பதாக கூறியிருந்தார்.

இருப்பினும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள மருத்துவர்கள் அவருக்கு எந்த காயமும் இல்லை உடல் தகுதியுடன் இருக்கிறார் என்று சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இதுதான் எதிராக அமைந்துவிட்டது என்று நினைக்கிறேன். வலி என்பது தனிநபர் சார்ந்தது. அதை பயிற்சியாளர்கள் முடிவு செய்ய முடியாது.

இதையும் படிங்க : “விராட் கோலியை அனுப்பிட்டு.. ரோகித் சர்மாவ இதுக்காகத்தான் கேப்டன் ஆக்கினேன்” – கங்குலி ஓபன் ஸ்பீச்

இஷான் கிஷான் ஏன் ரஞ்சி கிரிக்கெட் விளையாடவில்லை என்று இதுவரை யாருக்கும் தெரியாது. ஆனால் நான் இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது அவர் ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக அரையிறுதி விளையாடிக் கொண்டிருப்பார். அவர் முன்பும் ரஞ்சி கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கேட்டதற்காக விளையாடினார். அவர் ரஞ்சி கிரிக்கெட் விளையாட மாட்டேன் என்று கூறியதாக அர்த்தம் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.