ஓபனா சொல்றேன்.. ரிஷப் பண்ட்கிட்ட பழைய மாதிரி எதிர்பாக்காதிங்க.. இதான் காரணம் – கவாஸ்கர் பேட்டி

0
33
Pant

2024 மார்ச் 22 ஆம் தேதி துவங்கும் 17ஆவது ஐபிஎல் சீசனில், டெல்லி கேப்பிடல் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து பஞ்சாப் முல்லன்பூர் மைதானத்தில் மதியப் போட்டியில் மார்ச் 23ஆம் தேதி விளையாட இருக்கிறது.

2022 ஆம் ஆண்டு இறுதியில் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மறு வாழ்வில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். மேலும் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அவர் இணைந்து இருக்கிறார். இது ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகமான மகிழ்ச்சியான செய்தி.

- Advertisement -

அதே சமயத்தில் தற்பொழுது பயிற்சி மேற்கொண்டு வரும் ரிஷப் பண்ட் துவக்க போட்டிகளில் இருந்து டெல்லி அணிக்கு விளையாடுவாரா? பழையபடி விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக தொடர்வாரா? இல்லை பேட்ஸ்மேனாக மட்டும் இருப்பாரா? மேலும் களத்தில் நிற்காமல் இம்பேக்ட் பிளேயராக மட்டும் வருவாரா? போன்ற பல கேள்விகள் அவரைச் சுற்றி ஐபிஎல் தொடரின் டெல்லி அணியின் முதல் போட்டிக்கு முன்பாக இருந்து வருகிறது.

ஐபிஎல் தொடர் முடிந்து நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை இந்திய அணிக்கு இரண்டு விக்கெட் கீப்பர்கள் தேவையாக இருக்கும் நிலையில், அதற்கு இன்னும் யாரும் கண்டுபிடிக்கப்படாமல் அந்த இடம் காலியாகவே இருந்து வருகிறது. எனவே ஐபிஎல் தொடரில் நன்றாக செயல்படுவதன் மூலம் ரிஷப் பண்ட் டி20 உலக கோப்பை இந்திய அணிகளும் இடம் பெறலாம் என ஜெய் ஷா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பழைய ரிஷப் பண்ட்டை எதிர்பாக்காதிங்க

ரிஷப் பண்ட் குறித்து இந்திய லெஜெண்ட் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “ரிஷப் பண்ட் திரும்பி வரும் ஆரம்ப காலகட்டம் மிகவும் கடினமானதாக இருக்கும். ஆனால் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அவர் கொஞ்சம் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். இதனால் அவருக்கு கொஞ்சம் பயிற்சியும் கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் அவரால் பேட்டிங்கில் சரளமாக பழைய ரிஷப் பண்ட் போல விளையாட முடியாது.

- Advertisement -

விக்கெட் கீப்பிங் செய்வதற்கு முழங்கால் நன்றாக இருக்க வேண்டும் என சொல்கிறார்கள். ஆனால் பேட்டிங் செய்வதற்கும் முழங்கால் மிக மிக முக்கியமான ஒரு உடல் பகுதி. எனவே அந்த இடத்தில் காயம் அடைந்து திரும்ப வரும் ரிஷப் பண்ட் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற்றங்களை சந்திக்கலாம். எனவே பழையபடி அவர் விளையாடுவார் என எதிர்பார்க்க முடியாது.

இதையும் படிங்க : தோனிக்கு வயசாயிடுச்சு ஓட முடியாது உண்மைதான்.. ஆனா அவர் பெஞ்சமின் பட்டன் மாதிரி – மைக் ஹசி பேட்டி

மேலும் ரிஷப் பண்ட் மாதிரியான விக்கெட் கீப்பர்கள் எப்பொழுதும் பின்னால் இருந்து பேசி எதிரணி பேட்ஸ்மேன்களின் கவனத்தை உடைத்து அணிக்கு நல்லதை கொண்டு வரக்கூடியவர்கள். இதில் ரிஷப் பண்ட் இப்படி பேசும் பொழுது அவர் யார் குறித்து பேசுகிறாரோ அவர்களே ரசிக்கிறார்கள். எனவே அவர் அணிக்கு எல்லா வகையிலும் நன்மையைக் கொண்டு வரக்கூடியவர். அவர் திரும்ப வந்ததில் மகிழ்ச்சி” எனக் கூறியிருக்கிறார்.