இந்த சண்டை பிரச்சினையே இல்ல.. இது டீம்க்கு அவசியம்.. ஏன் தெரியுமா? – லக்னோ குளூஸ்னர் பேட்டி

0
354
Rahul

நடப்பு ஐபிஎல் தொடரில் கேஎல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி, அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியும் என்கின்ற ஒரு வாய்ப்பில் இருக்கிறது. பெரும்பாலும் அதுவும் ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்து அமையும். இந்த நிலையில் அந்த அணியின் உரிமையாளருக்கும் கேப்டனுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் பற்றி, அந்த அணியின் பயிற்சியாளர் லான்ஸ் குளூஸ்னர் பேசியிருக்கிறார்.

இந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக லக்னோ அணி விளையாடிய போட்டியில், 167 ரன்களை வெறும் 9.4 ஓவர்களில் துரத்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்று, மேலும் 150க்கும் மேற்பட்ட ரன்களை துரத்துவதில் சாதனையும் படைத்தது.

- Advertisement -

இந்தப் போட்டியின் முடிவுக்குப் பின் மைதானத்திற்குள் வந்த லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல்.ராகுல் உடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது முன்னாள் வீரர்கள் பலராலும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது. மேலும் கேஎல்.ராகுல் அணியில் தொடர மாட்டார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் லக்னோ அணியின் பயிற்சி குழுவில் இருக்கும் லான்ஸ் குளூஸ்னர் பேசும் பொழுது “இரண்டு கிரிக்கெட் பிரியர்களிடையே நடந்த வலுவான விவாதத்தில் எனக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது. என்னைப் பொறுத்தவரை இது ஒரு டீ கப்பில் ஏற்பட்ட புயல்தான். மேலும் நாங்கள் இப்படியான வலுவான விவாதத்தை விரும்புகிறோம். அணி சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறோம். இதனால் இது எங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனை கிடையாது.

கேஎல்.ராகுல் தனக்கே உரிய ஒரு பாணியை வைத்திருக்கிறார். இது அவரை ஒரு தனித்துவமான வீரராகவும் உலகம் முழுவதும் மரியாதைக்குரியவராகவும் வைத்திருக்கிறது. ஆனால் விதிவிலக்காக இந்த ஐபிஎல் தொடர் அவருக்கு கடினமாக இருந்திருக்கிறது. ஏனென்றால் நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வந்திருக்கிறோம். இதனால் அவர் எப்பொழுதும் இன்னிங்ஸை கட்டி எழுப்ப வேண்டிய அவசியத்தில் இருந்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : எழுதி வச்சுக்கோங்க.. டி20 உ.கோ-ல் இந்த இந்திய வீரர் எல்லாரையும் பயப்பட வைப்பார் – டேவிட் மில்லர் கணிப்பு

அவரைச் சுற்றி நாங்கள் ஒரு பேட்டிங் யூனிட்டாக எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி சிறப்பாக செயல்படவில்லை. இதன் காரணமாக அவருக்கு கடினமான சூழ்நிலை அமைந்து விட்டது. நாங்கள் கடினமான நேரங்களில் விக்கெட்டை இழந்து கொண்டிருக்கிறோம். மேலும் இது குறித்து நாங்கள் பேசி இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்