எழுதி வச்சுக்கோங்க.. டி20 உ.கோ-ல் இந்த இந்திய வீரர் எல்லாரையும் பயப்பட வைப்பார் – டேவிட் மில்லர் கணிப்பு

0
10711
Miller

இந்தியாவில் 17ஆவது ஐபிஎல் சீசன் இறுதிக் கட்டத்தை மிக வேகமாக எட்டிக் கொண்டிருக்கிறது. அடுத்த வாரத்தில் பிளே ஆப் சுற்று ஆரம்பிக்க இருக்கிறது. இந்த நிலையில் மே 26 ஆம் தேதி ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி நடைபெற்ற முடிவுக்கு வருகிறது. இதற்கு அடுத்த துவங்க உள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி குறித்து தென் ஆப்பிரிக்கா அணியின் டேவிட் மில்லர் பேசியிருக்கிறார்.

தற்போது டி20 உலகக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம் பிடித்திருக்கிறார்கள். மேலும் அனுபவ வீரர்களாக சூரியகுமார் யாதவ் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் இருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்து முதல் உலகக் கோப்பையில் விளையாடும் ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் வருகிறார்கள். மேலும் முதன்மை விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் இருக்கிறார்.

- Advertisement -

இத்தோடு பவுலிங் யூனிட் எடுத்துக் கொண்டால் குல்தீப் யாதவ் மற்றும் சாகல் முன்னணி சுழல் பந்துவீச்சாளர்களாகவும், சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் இருக்கிறார்கள். இத்தோடு வேகப்பந்து வீச்சில் பும்ரா, சிராஜ் உடன் அர்ஸ்தீப் சிங் இருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொள்ளும் பொழுது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணி வெஸ்ட் இண்டிஸ் சூழ்நிலைக்கு ஒரு அளவுக்கு சரியான அணியாகவே தெரிகிறது. விராட் கோலி துவக்க வீரராக களம் இறங்கினால் இன்னும் இந்த அணி வலிமையானதாக மாறும்.

இந்த நிலையில் இந்த இந்திய அணி பற்றி பேசி இருக்கும் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் கூறும் பொழுது “பல சிறந்த இந்திய வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் பேட்டராக இருப்பதால், பும்ரா தற்பொழுது மிகச் சிறப்பான நிலையில் இருப்பதாக நினைக்கிறேன். அவர் பல ஆண்டுகளாக உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளராக இருக்கிறார். மேலும் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் எனக்கு மட்டும் இல்லாமல் எல்லா பேட்ஸ்மேன்களுக்கும் அவர் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : சிஎஸ்கே போட்டிக்கு முன்.. ஆர்சிபியை விட்டு கிளம்பிய 2 நட்சத்திர வீரர்கள்.. பெரும் பின்னடைவு

பும்ரா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 62 போட்டிகளில் 74 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். மேலும் தற்பொழுது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மொத்தம் 13 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை கைப்பற்றி, அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள் பட்டியலில் முதல் இடத்திலும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது