KKR vs GT போட்டி மழையால் கைவிடப்பட்டது.. முதல் முறை குஜராத்துக்கு நடந்த பரிதாபம்.. பிளே ஆப் நிலவரங்கள்

0
1935
IPL2024

நடப்பு ஐபிஎல் 17ஆவது சீசனின் 63வது போட்டியில், குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று நடைபெற இருந்தது. ஆனால் இந்தப் போட்டி இன்று மழையின் காரணமாக கைவிடப்பட்டது.

இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டன் ஹரிதிக் பாண்டியா டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்று விட்ட காரணத்தினால், இந்திய இளம் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டு அணியை வழிநடத்தினார்.

- Advertisement -

தொடரின் ஆரம்பத்தில் குஜராத் அணிகள் சில வெற்றிகளை பெற்றது. ஆனால் அதற்குப் பிறகு அவர்களுக்கு துவக்கம் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங் யூனிட்டில் சரியாக அமையாத காரணத்தினால் தொடர் தோல்விகள் வர ஆரம்பித்தது.

இந்த நிலையில் 12 போட்டிகள் விளையாடுகின்ற அவர்கள் 5 வெற்றிகள் பெற்றிருந்தார்கள். கடைசி இரண்டு போட்டிகளை வெல்வதின் மூலமாக ஒரு சதவீதம் அவர்களுக்கு பிளே ஆப் வாய்ப்பு இருந்தது. இந்த நிலையில் இன்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டு ஒரு புள்ளி மட்டுமே வழங்கப்பட்டது. இதன் காரணமாக அவர்கள் நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் வாய்ப்பில் இருந்து வெளியேறியிருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் 2022 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடருக்கு புதிதாக வந்த குஜராத் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையில் முதல் சீசனிலேயே கோப்பையை வென்று அசத்தியது. அதே சமயத்தில் இரண்டாவது சீசனில் இறுதிப் போட்டிக்கு வந்து கடைசிப் பந்தில் தோல்வி அடைந்தது. இப்படியான நிலையில் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் பிளே ஆப் வாய்ப்புக்கு தகுதி பெற முடியாமல் அந்த அணி வெளியேறியது.

இதையும் படிங்க : இந்த சண்டை பிரச்சினையே இல்ல.. இது டீம்க்கு அவசியம்.. ஏன் தெரியுமா? – லக்னோ குளூஸ்னர் பேட்டி

அதே சமயத்தில் கொல்கத்தா அணி தற்பொழுது 19 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. இதன் காரணமாக அந்த அணிக்கு முதல் இரண்டு இடத்தில் ஏதாவது ஒரு இடம் உறுதி ஆகிவிட்டது. எனவே அவர்கள் நேரடியாக இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றுவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வழக்கம் போல் பிளே ஆப் சுற்றுக்கு இரண்டு இடங்களுக்கான போட்டியில், ஹைதராபாத், லக்னோ, சென்னை, பெங்களூரு டெல்லி ஆகிய ஐந்து அணிகள் போட்டியிட்டு வருகின்றன.

- Advertisement -