தோனிக்கு வயசாயிடுச்சு ஓட முடியாது உண்மைதான்.. ஆனா அவர் பெஞ்சமின் பட்டன் மாதிரி – மைக் ஹசி பேட்டி

0
442
Dhoni

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பிறகு 2022ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் கட்டாயம் நடத்தப்படும் என ஐபிஎல் சேர்மேன் அருண் துமால் கூறியிருக்கிறார். எனவே எதிர்காலத்திற்கான வீரர்களை தக்க வைத்து, அதில் ஏதாவது பணத்தை மீதி செய்ய முடிந்தால், மீதி செய்து மெகா ஏலத்திற்கு போவதுதான் ஐபிஎல் அணிகளின் வழக்கம்.

இந்த வகையில் எடுத்துக் கொண்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு 42 வயதாகிறது. அவர் தற்பொழுது 12 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். இந்த நிலையில் அவரை அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைக்கும் என்றால், தக்க வைக்க வேண்டிய ஒரு இளம் இந்திய வீரரை இழக்க வேண்டியதாக இருக்கும். மேலும் 12 கோடி ரூபாய் பணமும் இழப்பு ஏற்படும்.

- Advertisement -

இந்த வகையில் எடுத்துக் கொண்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரே கடைசி கிரிக்கெட் தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் விளையாடி ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடமும் இருந்து அவர் ஓய்வு பெற விரும்பிய படியே நடக்க இருக்கிறது.

மார்ச் முதல் வாரத்தில் சென்னை வந்த மகேந்திர சிங் தோனி தன்னுடைய பயிற்சிகளை வேகமாக ஆரம்பித்து விட்டார். மேலும் அவருக்கு கடந்த ஆண்டு முழங்காலில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்தது நல்ல முறையில் குணமடைந்து இருப்பதாக தெரிகிறது. அவருடைய பயிற்சியில் அப்படியான தொந்தரவுகள் எதுவும் இருப்பதாக இதுவரை செய்திகள் வரவில்லை.

தோனி பெஞ்சமின் பட்டன் மாதிரி

மேலும் பயிற்சி வீடியோக்களில் பார்க்கும் பொழுது தோனி பந்தை மிகச் சரியாக கனெக்ட் செய்து ஹிட் அடிக்கிறார். இறுதிக்கட்ட ஓவர்களுக்கு என்ன தேவையோ அதை கொடுக்க முடிந்த அளவில் அவருடைய ஹிட்டிங் மிகச் சிறப்பாக தெரிகிறது. இந்த நிலையில் சிஎஸ்கே பேட்டிங் கோச் மைக் ஹசி ஆங்கில படமான ‘தி க்யூரியஸ் கேஸ் ஆப் பென் பட்டன்’ திரைப்படத்தில் பிராட் பிட் வயதான தோற்றத்தில் நடித்த கேரக்டருடன் தோனியை ஒப்பிட்டு பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “தோனி முன்பு போல் இளமையாக இல்லை. அவரால் விக்கெட்டுகளுக்கு இடையில் கடுமையாக ஓடி ரன்கள் எடுக்க முடியாது. ஆனால் அதே சமயத்தில் அவரால் கடைசி கட்டத்தில் வந்து சிறப்பாக விளையாட முடியும். இப்பொழுதும் பந்தை மிக சுத்தமாக அடிப்பதில் மிகத் திறமையாக இருக்கிறார். எனவே அவருக்கு இதில் எந்த பிரச்சனையும் கிடையாது.

இதையும் படிங்க : பாகிஸ்தான் பிஎஸ்எல் பரிசு தொகை.. இந்திய மகளிர் டி20 லீக் பரிசு தொகையை விட குறைவு.. முழு விவரங்கள்

மேலும் மகேந்திர சிங் தோனி மிகவும் நன்றாக தயாராகி வருகிறார். இந்த நிலையில் அவருடைய முழங்கால் நன்றாக இருக்கிறது. தற்போது அவர் நன்றாக பேட்டிங் செய்கிறார். அவர் பெஞ்சமின் பட்டன் போன்றவர் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அவர் தொடர்ந்து முன்னேறி வருகிறார்” என்று கூறி இருக்கிறார்.