“மும்பை இந்தியன்ஸ்க்கு ரோகித் சர்மா முக்கியம் கிடையாது.. இதுதான் முக்கியம்” – சுனில் கவாஸ்கர் பேச்சு

0
241
Rohit

இந்த முறை பிளே ஆப் சுற்றுக்கு எந்த அணி தகுதிபெறும் என்றால் முதலில் பல பேர் மும்பை இந்தியன்ஸ் அணியைத்தான் சொல்வார்கள். அந்த அளவிற்கு அந்த அணி மிகப் பலமானதாக மாறி இருக்கிறது.

இந்த வருட ஐபிஎல் சீசனுக்கு நடைபெற்ற மினி ஏலத்தில் ஜெரால்ட் கோட்சி, நுவன் துசாரா, மதுசங்கா என சிறப்பான வேகப்பந்துவீச்சாளர்களை வாங்கி, கூடுதலாக பும்ராவும் வர இருப்பதால் மிக பலமாக தெரிகிறது.

- Advertisement -

அடுத்து ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக டிரேடிங் மூலமாக வேகபந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை வாங்கியதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் பல மடங்காக மாறி இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் வேகப்பந்து வீச்சில் இந்திய வீரர் ஆகாஷ் மத்வால் வேறு இருக்கிறார்.

இதன் காரணமாக அவர்களுக்கு வான்கடே சிவப்பு மண் ஆடுகளத்திற்கு சரியான வேகப்பந்துவீச்சாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். மேலும் பிளேயிங் லெவனில் இடம்பெறக்கூடிய மூன்று இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

இதனால் அவர்களுடைய பேட்டிங் நீளமும் மிகப்பெரியதாக அமைத்துக் கொள்ள முடியும். தேவைக்கு தகுந்த மாதிரியான வீரர்களையும் மாற்றி மாற்றி அணியில் பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே அவர்கள் யாரையும் விட பலமான அணியாக தெரிகிறார்கள்.

- Advertisement -

ஆனால் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்கி ரோகித் சர்மாவை நீக்கியது இப்பொழுது வரை பெரிய சர்ச்சையாக இருந்து வருகிறது. இதன் காரணமாக எப்பொழுதும் இல்லாத அளவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி சொந்த ரசிகர்களாலேயே கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளானது.

இது குறித்து பேசி உள்ள சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “நீங்கள் மும்பை இந்தியன்ஸ் அணியை எடுத்துக் கொண்டால் அவர்கள் எப்பொழுதுமே எதிர்காலத்திற்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். ரோகித் சர்மாவுக்கு தற்பொழுது 36 வயதாகிறது. மேலும் இந்திய கிரிக்கெட் மூன்று வடிவத்திலும் கேப்டனாக இருப்பதால் பெரிய சுமை இருக்கிறது. இதனால் அவருடைய சுமை ஒரு இளம் தோளுக்கு ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க : “என்னால அந்த ரகசியத்தை மட்டும் சொல்ல முடியாது” – போப் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி

ஹர்திக் பாண்டியாவை இப்பொழுது கேப்டனாக கொண்டு வந்திருப்பது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு திட்டம். எனவே டாப் ஆர்டரில் வந்து ரோஹித் சர்மா பிரஷர் இல்லாமல் விளையாட முடியும். அதே சமயத்தில் ஹர்திக் பாண்டியா மூன்று இல்லை ஐந்தாவது இடத்தில் வந்து விளையாடி தங்களது அணியை ஒவ்வொரு முறையும் 200 ரன்கள் தாண்டி கூட்டிச் செல்ல முடியும்” என்று கூறி இருக்கிறார்.