“என்னால அந்த ரகசியத்தை மட்டும் சொல்ல முடியாது” – போப் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி

0
94
Pope

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது இரண்டு நாடுகளையும் தாண்டி பலரை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

இந்த வெற்றி இங்கிலாந்து அணியின் பாஸ்பால் டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறையை இன்னும் சில ஆண்டுகளுக்கு நீடிக்க வைப்பதற்கான மருத்துவமாகப் பயன்பட்டிருக்கிறது. அந்த முறையால் எந்த நாட்டிலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை வெல்ல முடியும் என இங்கிலாந்து காட்டி இருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக இங்கிலாந்து பாஸ்பால் அணுகுமுறையின் மீது இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்திற்கு புது நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. மேலும் இப்படியான ஒரு அணுகுமுறை உலகக் கிரிக்கெட்டிலும் பரவலாம்.

இந்த வெற்றி இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இப்படியான வெற்றிக்கு இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் போப் பேட்டிங் மிக முக்கிய காரணமாக அமைந்தது. அவருடைய கிரிக்கெட் கேரியரில் குறிப்பிட்ட இந்த இன்னிங்ஸ்தான் முதல் இடத்தில் இருக்கும்.

இந்த நிலையில் மூன்றாவது போட்டிக்கு எப்படியான இங்கிலாந்து அணி அமையும் என்று பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி முன் வைத்தார்கள். இதற்கு போப் தன்னால் எந்த ரகசியத்தையும் கூற முடியாது எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து போப் கூறும் பொழுது “இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. நான் இங்கு பல ரகசியங்களைவெளியிட முடியாது. ஆடுகளத்தில் தற்போது கொஞ்சம் புல் இருக்கிறது. நாளை ஒரு நாள் முழுவதும் வெயிலில் இருக்கும் பொழுது இந்த நிலைமைகள் மாறலாம்.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு அடுத்து நல்ல நீண்ட இடைவெளி கிடைத்திருக்கிறது. டெஸ்ட் போட்டிகளுக்கு நடுவே இவ்வளவு பெரிய இடைவெளி கிடைக்கும் பொழுது நாம் கிரிக்கெட்டை விட்டு விலகி இருப்பதற்கு முடியும்.

இதையும் படிங்க : “கேஎல்.ராகுல் இல்லை.. ஜடேஜாவாவது விளையாடுவாரா?” – குல்தீப் யாதவ் வெளியிட்ட தகவல்

குடும்பங்களுடன் சேர்ந்து இருப்பது மகிழ்ச்சியான விஷயம். எங்களுடையநிறைய வீரர்களுக்கு இளம் குழந்தைகள் இருக்கிறார்கள். தொடரின் நடுவில் அவர்கள் இப்படி குடும்பமாக ஒன்று இணைவது நல்ல விஷயம். இதன் மூலமாக எங்களுடைய வீரர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.