வந்த வேகத்தில்.. மீண்டும் இலங்கை திரும்பிய பதிரானா.. கலக்கத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்.. காரணம் என்ன?

0
10628
Pathirana

இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணிக்காக பதிரனா களம் இறங்காத காரணம் தெரிய வந்திருக்கிறது.

இன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி விளையாடிக் கொண்டிருக்கும் போட்டியில் பதிரனா இடம் பெறவில்லை. வேகப்பந்துவீச்சாளர்களாக துஷார் தேஷ்பாண்டே, கிளிசன் மற்றும் சர்துல் தாக்கூர் ஆகியோர் மட்டும் இடம்பெற்று இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் சிஎஸ்கே அணிக்கு சிறப்பாக வேகப்பந்து வீச்சில் செயல்பட்டு வந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முஸ்தஃபிஷூர் ரஹ்மான் பங்களாதேஷ் அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடும் டி20 தொடரில் பங்கேற்பதற்காக நாடு திரும்பிவிட்டார். மேலும் தீபக் சாஹரும் காயத்தால் பாதிக்கப்பட்டு மேற்கொண்டு விளையாடுவது சந்தேகத்திற்கு இடமாக இருக்கிறது.

இதன் காரணமாக சிஎஸ்கே அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் மிகவும் பலவீனமாக காணப்படுகிறது. மேற்கொண்டு இருக்கும் போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்கின்ற நெருக்கடியான நிலையில் சிஎஸ்கே அணி இருந்து வருகிறது.

இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை விசா தொடர்பாக இலங்கை திரும்பியிருந்த பதிரனா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாட தரம்சாலா மைதானத்திற்கு திரும்பி இருந்தார். இதன் காரணமாக அவர் இன்று களம் இறங்குவது உறுதியான நிலையில் இருந்தது. இந்த நிலையில் அவர் திடீரென மீண்டும் இலங்கைக்கு சென்று விட்டார்.

- Advertisement -

இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணிக்காக பதிரனா களம் இறங்காத காரணம் தெரிய வந்திருக்கிறது.

இதையும் படிங்க : 56 போட்டிகள்.. டி20 உலககோப்பை.. சிஎஸ்கே ஷிவம் துபேவுக்கு நடந்த வினோத சோகம்

தற்பொழுது சிஎஸ்கே தரப்பில் பதிரனா குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “சென்னை சூப்பர் கிங்ஸ் வேகப்பந்துவீச்சாளர் மதிஷா பதிரனா தொடைத்தசையில்காயத்துடன் இருக்கிறார். காயத்தில் குணமடைவதற்காக தற்பொழுது அவர் இலங்கைக்கு திரும்பி இருக்கிறார்” என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் அவர் விளையாட மாட்டார் என்றும் வெளியில் பேசப்பட்டு வருகிறது. சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கு பெரிய கலக்கத்தை உண்டாக்கி இருக்கிறது!